பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்க்கை நெறிமுறைகளும் அறிவுரைகளும் 125

"மகிழ்ந்தது சிந்தை திருமாலே"

. )ம்,

"துணிந்தது சிந்தை துழாயலங்கல் அங்கம்

அணிந்தவன்பேர்"

n -ன்றும்,

"சிறியார் பெருமை சிறிதின்கண் எய்தும்

அறியாரும் தாம்அறியா ராவர்”

.ன்றும்,

"ஒத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்

ஏத்தும் திறம்அறிமின் ஏழைகாள்" .ன்றும்,

"பொருளால் அமருலகம் புக்கியல லாகாது

அருளால் அறம்அருளும் அன்றே" என்றும் ஆழ்வார் பாடுகிறார்.

“அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்

கிவ்வுலகம் இல்லை யாங்கு” என்பது வள்ளுவர் வாக்காகும்.

“அருள்புரிந்த சிந்தை அடியார்மேல் வைத்து

பொருள்தெரிந்து காண்குற்றஅப் போது - இருள்திரிந்து நோக்கினேன்"

என்று ஆழ்வார் மனமுருகிப் பாடுகிறார்.

பேயாழ்வார்

"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன் திகழும்

அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும் பொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக்கண்டேன் என்னாழி வண்ணன்பால் இன்று” என்று பேயாழ்வார் தமது திருவந்தாதியைத் தொடங்குகிறார்.

"மருந்தும் பொருளும் அமுதமும் தானே

திருந்திய செங்கண்மால் ஆங்கே" என்று பாடுகிறார்.