பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 11

தொண்டரடிப்பொடியாழ்வாரின் அரங்கத்தம்மனின் பள்ளி யெழுச்சிப் பாடல்களைத் தொடர்ந்து பாரதி பாரத மாதா திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களைப் பாடுகிறார்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் இளங்கோவடிகள் மூன்று தமிழ்நாடுகளைப்பற்றியும், மூவேந்தர்களை பற்றியும், அவர்களின் ஆட்சிகளைப்பற்றியும், அந்: மன்னர்களின் அருங்குணங்கள், சிறப்புகள், ஆற்றல்கள் அருஞ்செயல்கள்பற்றியும் மிகவும் விரிவுபட எடுத்து கூறுகிறார். மனித சமுதாய வரலாற்றில் அரசுகள் என்னுட அமைப்புகள் ஏற்பட்டது என்பது ஒரு முக்கியமான சமுதாய வளர்ச்சிக் கட்டமாகும். மக்கள் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டு, கால்நடைகளைப் பராமரித்துக்கொண்டு, காலப் பயணத்தில் பசுமை நிறைந்த புல்வெளிப்பகுதிகளைத் தேடிக்கொண்டு, இடம்விட்டு இடம் மாறிக்கொண்டு, புதிய இடங்களுக்குச் சென்றுகொண்டு, நிலையில்லாத சமுதாயக் குழுக்களாகவும் கூட்டங்களாகவும் இருந்துகொண்டிருந்த நிலை மாறி, சாகுபடித் தொழிலையும், பல வேறு குடிசைத் தொழில்களையும் கற்றுக்கொண்டு, ஆற்றோரங்களிலும் கடலோரங்களிலும் நிலைபெற்ற இனக்கூட்டங்கள் இணைந்த சமுதாயக் கூட்டங்களாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த காலத்தில் அரசுகள் தோன்றின.

அந்த அரசுகளின் காவலர்களாக, ஆட்சிப் பொறுப்பாளர்களாக அரசர்கள் வந்தார்கள். முதலில் குறுநில மன்னர்களாக, அடுத்த வளர்ச்சிக் கட்டமாகச் சிறுநில மன்னர்களாக அதற்கடுத்த வளர்ச்சிக் கட்டமாகப் பெருநில மன்னர்களாக வரலாற்றில் இடம் பெற்று அவர்கள் ஆட்சி நடத்தினார்கள். அத்தகைய பெருநில நாடுகளாகவே பாரதத்தில் ஐம்பத்தாறு தேசங்களும், அவைகளின் அரசுகளும் அரசர்களும் என்று அமைந்திருந்தார்கள். அதன் பகுதியாகவே தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர் என்னும் மூன்று தமிழ் மன்னர்களும், அவர்களின் அரசுகளும், அவர்கள் ஆண்ட நிலப்பகுதிகளும் அமைந்திருந்தன. அந்த மூன்று நிலப்பகுதிகளை மிகவும் சிறப்பாக எடுத்துக் கூறுவது லெப்பதிகாரக் காப்பியமாகும். இச்சிலப்பதிகாரக்