பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

ஆசிரியப்பாவில் பாடியுள்ள பாடல் அடிகளில் ஆழ்வார்,

ஒரு பேருந்தி (திருமாலின் உந்திக் கமலம்) இருசுடர், மும்மதிள், இருகால், ஒரு சிலை, ஈரெயிறு, மூவடி நிலம், நானிலம், முப்புரிநூல், இருபிறப்பு, ஒரு முறை ஈரடி, மூவுலகம், நாற்றிசை, நால்வாய், மும்மதம், இருநீர்மடு, முத்தி, நான்மறை, ஐவகை வேள்வி, அறுதொழில், ஐம்புலன் அகத்தினுள்ள செறுத்து, நான்குடன் அடக்கி, முக்குனத் திரண்டவை யகற்றி, ஒன்றின் ஒன்றி நின்று, இரு பிறப்பறுப்போர் அறியும் தன்மை, முக்கண், நாற்றோள், ஐவாய் அரவு, ஆறு பொதி சடையோன், ஏழுலகம், அறுசுவை, ஐம்படை, நாற்றோள், முந்நீர், ஈரடி ஒன்றிய மனம், ஒரு மதிமுகம், மங்கையர் இருவர், முப்பொழுது, நால்வகை வருணம், ஐம்பெரும்பூதம், அறுபதம், ஏழ்விடை, அறுவகைச் சமயம், ஐம்பால், அறமுதல் நான்கவை, மூர்த்தி மூன்று, இருவகைப் பயன் என்றெல்லாம் தொகுத்து, வகுத்து அறிதுயில் அமர்ந்த பிரானைக் குறிப்பிட்டுப் பாடுகிறார். இப்பாடல்களில் சிறந்த பல சமுதாயக் கருத்துகளையும் தத்துவ ஞானக் கருத்துகளையும் பக்திச் சுவையுடன் சிறப்பான தமிழ்ச்சொற்களில் குறிப்பிட்டு ஆழ்வார் அழகாகப் பாடியிருப்பதைக் காண்கிறோம்.

அறுசுவைப் பயனும் ஆண்டவனே என்று ஆழ்வார் கூறுகிறார். நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை என்று கூறுகிறார். இங்கு நால்வகை வருணத்தில் ஆழ்வார் பேதம் கற்பிக்கவில்லை, உயர்வு தாழ்வு கற்பிக்கவில்லை. அவைகளை ஒன்றாகவே கருதி ஆண்டவன் வடிவாகக் காண்கிறார்.

அறமுதல் நான்கவையாய் என்று, அறம் பொருள் இன்பம் வீடு என்று நான்கு புருடார்த்தங்களையும் ஆக்கல் நிலைபெறுத்தல் நீக்கல் ஆகிய படைத்தல் காத்தல் நீக்கல் இணைந்த முத்தொழில்களைக் குறிக்கும் மூர்த்திகள் மூன்றையும் இருவகைப் பயன்களையும் ஒன்றாக விரிந்து நிற்கும் ஆண்டவனை அடையாளப்படுத்தி ஆழ்வார் பாடுகிறார்.