பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"உறுபெறும் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்

வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங்கியசீர், நெறிதரும் செந்தமிழ் ஆரண மேயன்றிந் நீள்நிலத்தோர் அரிதர நின்ற இராமா னுசன்எனக் காரமுதே' என்று பாடுகிறார். இன்னும்,

"பொருந்திய தேசும் பொறையும் திறலும் புகழும்நல்ல திருந்திய ஞானமும் செல்வமும் சேரும் செறுகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையி னால்வந் தெடுத்தளித்த அருந்தவன் எங்கள் இராமா னுசனை அடைபவர்க்கே. என்று பாடுகிறார்.

இராமானுசர்தாம் பெரும் செல்வமும் தந்தையும் தாயும் குருவும் பூமகள் நாதனும் ஆவார் என்றும், அந்த இராமானுசரை அடைந்தால் தேசும், பொறையும், திறலும், புகழும், திருந்திய ஞானமும், செல்வமும் சேரும் என்றும் தமது பாடல்களில் குறிப்பிடுகிறார். இவையெல்லாவற் றிற்கும் மேலாகச் "செருகலியால் வருந்திய ஞாலத்தை வண்மையினால் வந்து எடுத்து அளித்த அருந்தவப் பெருமான்" என்று குறிப்பிடுவது சிறப்பாகும். அத்துடன் திருந்திய ஞானமும் செல்வமும் என்று குறிப்பிடப் பட்டிருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும்.

மேலும், இராமானுசரைப்பற்றிக் குறிப்பிடும்போது முத்தமிழும், நான்கு வேதங்களும் எல்லையில்லா அறநெறி அனைத்தையும் தெரிந்தவன் என்று பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

"சொல்ஆர் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்கும்எல்லை

இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்னருஞ்சீர் நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம்நம்பிக் கல்லார் அகலிடத் தோர்எது பேறென்று காமிப்பரே" என்று பாடுகிறார்.

அன்று மாயக் கண்ணன் ஐவருக்குத் தெய்வத் தேரினில் இருந்துகொண்டு செப்பிய கீதையின் உண்மைப் பொருளை உலகறியச் சொன்ன இராமானுசனுக்கு நிகர் யாருமில்லை என்பதை