பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|36 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

புகார் நகரில் இந்திர விழா மிகச்சிறப்பாக நடை பெறுகிறது. விழாவின்போது நகரில் அலங்காரங்கள் செய்யப் படுகின்றன. வீடுகள் மெழுகப்பட்டுக் கோலமிட்டு அலங்காரம் செய்யப்படுகின்றது. ஆடல் பாடல்கள், ஆட்டடாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் புத்தாடைகள் உடுத்தித் தங்களை ஒப்பனை செய்துகொள்கின்றனர்.

கோயில்களில் மக்கள் ஒன்றுகூடிப் பொங்கலிட்டுக் குது கலமாக ஆடிப்பாடி மகிழ்கின்றனர். இந்திர விழாவின்போது எல்லாக் கோயில்களிலும் விழாக்கள் நடை பெறுகின்றன என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்கள். அவ்வாறு விழாக்கள் நடைபெறும் கோயில்களில் பலதேவன் கோயிலையும் திருமால் கோயிலையும் குறிப்பிடுகிறார்.

"வால்வளை மேனி வாலியோன் கோயிலும்

நீல மேனி நெடியோன் கோயிலும்"

என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

ஒரு விஞ்சையன் தனது காதலியை அழைத்துக் கொண்டு இந்திர விழாவைக் காண்பதற்காகப் புகார் நகருக்கு வந்தான். வரும் வழியில் அந்த விஞ்சையன் தன் காதலிக்கு இமய மலையையும், வளம் மிகுந்த நீர் பொங்கும் கங்கை நதியையும், அழகிய உஞ்சை நகரையும், விந்திய மலையையும், அதன் அடர்ந்த காடுகளையும், வேங்கட மலையையும், நிலம் தாங்க முடியாதபடி நிறைந்த விளைச்சலைக் கொண்ட காவிரி நாட்டையும் காட்டிப் பின்னர்ப் பூம்புகார் நகரை அடைந்தான் என்று அடிகளார் குறிப்பிடுகிறார்.

"துவரிதழ்ச் செவ்வாய்த் துடியிடை யோயே அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச் சிமையத் திமயமும் செழுநீர்க் கங்கையும் உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும் வேங்கட மலையும் தாங்கா விளையுள் காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப் பூவிரி படப்பைப் புகார்மருங் கெய்தி" என்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன.

இங்கு திருவேங்கடத்தைக் குறிப்பிடுவது சிறப்பாகும். திருமால் திருஉறை மார்பனாக எழுந்தருளியுள்ள வைணவத்