பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

காப்பியத்திற்கு, அதன் கதைப்பகுதிகளுக்கு இந்த மூன்று நிலப்பகுதிகளும் களங்களாக அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இதில் தமிழ் மக்களின் ஒற்றுமை, தமிழ் மக்கள் வாழும் தமிழகத்தின் ஒற்றுமை என்பது இளங்கோவடிகளின் அடித்தளமான சிந்தனையாக இருப்பதைக் காணமுடிகிறது. இந்த மூன்று நாடுகளின் தலைநகரங்கள், துணை நகரங்கள், நாட்டுப்பகுதிகள், ஆறுகள், மலைகள், காடுகள், மரங்கள், சோலைகள், தோப்பு:துரவுகள், விலங்கினங்கள், ஆடுமாடுகள், பறவையினங்கள், அந்த நாடுகளில் வாழும் மக்கள், மக்கள் பிரிவுகள், அவர்கள் வழிபட்ட தெய்வங்கள், கோவில்கள், அவர்கள் விளைவித்த விளைபொருள்கள், செய்துவந்த தொழில்கள், அத்தொழில்கள் மூலம் கிடைத்த பொருள்கள், செல்வங்கள், அப்பொருள்களின் பண்ட மாற்றங்கள் நடைபெறும் சந்தைகள், பலவகை அங்காடிகள், வாணிபம், உள்நாட்டு வெளிநாட்டு வாணிபம், அம்மக்கள் வளர்த்த கலைகள், அருங்கலைகள், இசை, ஆடல் பாடல், கூத்துகள், நாட்டியம், நாடகம், வாழ்க்கை நெறிமுறைகள், மனித வாழ்க்கையின் நலன்களுக்காக, அம்மக்களின் முன்னேற்றத்திற்காக அவர்கள் சிந்தித்த சிந்தனைக் கருத்துகள் முதலியவைகளைப்பற்றியெல்லாம் காப்பியத்தில் மிகவும் விரிவாகப் படிக்கிறோம்.

சிலப் பதிகாரக் காப்பியத்தின் கதைப் பிரிவுகள் வரலாற்றுத் தன்மையையும் புவியியல் தன்மையையும், அரசியல் மற்றும் சமுதாய வாழ்க்கையையும் பிரதிபலிப்பன வாகவும் அமைந்திருக்கின்றன. இராமன் அயோத்தியிலிருந்து புறப்பட்டுப் பல ஆறுகளையும் மலைகளையும் காடுகளையும் வனங்களையும் நாடுகளையும் பல மக்களையும் சந்தித்து, இலங்கைவரை சென்று, அங்கு போரிட்டு வெற்றிகண்டதைப் பற்றிக் கம்பன் மிகவும் விரிவாக விளக்குவதைப் படிக்கிறோம். அதே போல, புகாரிலிருந்து புறப்பட்ட கோவலனும் கண்ணகியும் பல ஆறு களையும் மலைகளையும், ஊர்களையும் நகரங்களையும், கோவில் குளங்களையும், புனல்களையும், கானல்களையும், வயல் வெளிகளையும் காடுகளையும் கடந்து, பல மக்களையும் சந்தித்து, மதுரை