பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

'வலங்கொள் நேமி மழைநிற வானவன்

அலங்கு தாள்.இணை தாங்கிய அம்மலை விலங்கும் வீடுறு கின்றன, மெய்ந்நெறிப் புலங்கொள் வார்கட்கு அனையது பொய்க்குமோ?" என்றும்,

"ஆய குன்றினை எய்தி, அருந்தவம்

மேய செல்வரை மேவினர் மெய்ந்நெறி நாய கன்தனை நாளும் வணங்கிய தூய நற்றவர் பாதங்கள் சூடினார்” என்றும் கம்பன் கவிதைகள் குறிப்பிடுகின்றன.

திருவேங்கடமலை வடமொழிக்கும் தென்மொழிக்கும் எல்லையாக அமைந்துள்ளது. நான்மறைகளுக்கும் மற்ற இதர நூல்களுக்கும், அவைகளில் சொல்லப்பட்டிருக்கும் சிறந்த பொருள்களுக்கெல்லாம் எல்லையாக நல்லறிவுக்கு முடிவாக அமைந்து ஈடு இணையற்றதாகப் புகழ்மிக்கதாகச் சத்திய நிலைகொண்ட மெய்ப்பொருளாக, மேகக் கூட்டமும் சார லும் பொங்கியதாக விளங்குகிறது.

நீல வண்ணனைத் தாங்கி நிற்கும் அம்மலைக்குச் செல்லும் விலங்குகளும் வீடுபேற்றைப் பெற்றுவிடுகின்றன. மெய்நெறியாளர்கள் நற்கதியடைவதற்குச் சொல்லவும் வேண்டுமா? அத்தகைய புண்ணிய மலையை அடைந்து, அங்கு எழுந்தருளியுள்ள மெய்ந்நெறி நாயகனைத் தினமும் வணங்கிவரும் அடியார்களை வணங்கிவிட்டு அனுமன் படை மேலும் தெற்கு நோக்கித் தொண்டை நாட்டிற்குச் சென்றது என்று கம்பர் விவரிக்கிறார்.

இந்திர விழாவில் மாதவி ஆடிய பாடிய ஆடல் பாடல்களைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடும்போது "மாயோன்பாணி" பற்றியும்,

"கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக

அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள் அல்லியத் தொகுதியும் அவுனன் கடந்த மல்லின் ஆடலும்”

என்றும்,