பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 139 "வாணன் பேரூர் மறுகிடை நடந்து

நீணிலம் அளந்தோன் -324,14–ш குடமும்” ை.81 .7 ו/שו),

"பதினோ ராடலும் பாட்டின் பகுதியும்" என்று பல வகை ஆடல்களையும் குறிப்பிட்டு, அவற்றுள் மாயோன் பாணியை மிகவும் சிறப்பித்துக் கூறுகிறார்.

மாயோன்பாணி என்பது திருமாலை வாழ்த்துகின்ற தேவபாணியாகும். இந்த பாணி, பதினோராடலில் முக நிலையாக ஆடுவதும் பாடுவதுமாகும். தொடக்கப் பாடல் இதுவேயாகும். அது வருமாறு :

"மலர்மிசைத் திருவினை வலத்தினில் அமைத்தவன்

மறிதிரைக் கடலினை மதித்திட அடைந்தவன், இலகொளித் தடவரை கரத்தினில் எடுத்தவன்

இளநிரைத் தொகைகளை இசைத்தலில் அழைத்தவன் முலையுணத் தருமவள் நலத்தினை முடித்தவன்

முடிகள்பத் துடையவன் உரத்தினை அறுத்தவன் உலகனைத் தையும்ஒரு பதத்தினில் ஒடுக்கினன்

ஒளிமலர்க் கழல்தரு வதற்கினி யழைத்துமே !” என்று பாடலாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

இப்பாடல், திருமாலின் சிறப்பினைப் பாடும் அழகிய அருமையானதொன்றாகும்.

திருமகளைத் தனது உள்ளத்தில் வைத்திருப்பவன், பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன், கோவர்த்தன கிரியைக் கையிலே எடுத்துக் குடையாகப் பிடித்தவன், தனது குழலிசை மூலம் ஆநிரைகளை அழைத்தவன், விஷப்பால் கொடுத்துக் கொல்லவந்த பூதகியின் உயிரைக் குடித்தவன், பத்துத் தலைகளைக் கொண்ட இராவணனுடைய தலைகளை அறுத்தவன், உலகமனைத்தையும் ஒரு பதத்தில் ஒன்றிணைத்தவன், அவனுடைய மலர்ப்பதங்களைப் பணிவோம் என்று கூறுகிறது, அப்பாடல்.

கரிய திருமேனியையுடைய கண்ணன் ஆடிய பத்து வகை ஆடல்களையும் அவைகளின் பிரிவுகளையும், கஞ்சன் செய்த வஞ்சனைகளிலிருந்து நீங்குவதற்காக ஆடப்பட்ட