பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமுய

ஆடல்களையும் அல்லியத்தொகுதி என்று இளங்கோவடிக.ை தமது காப்பியத்தில் குறிப்பிடுகிறார். கஞ்சன் செய்த வஞ்சனைகளையும், அவைகளை முரியடித்த கண்ணனுடைய லீலைகளையும் சாகசங்களையும் வீரச் செயல்களையும்பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் பல இடங்களிலும் மிக விரிவாகக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்கள்.

இவை பற்றிக் குறிக்கும் ஆடல்கள் பாடல்கள், அபிநயங்கள், கூத்துகள் முதலியன நமது நாட்டுமக்களின் உள்ளங்களில் பதிந்துள்ள நிகழ்ச்சிகளாகும்.

இவைபற்றிச் சிலப்பதிகாரக் காப்பியத்தில் மாதவியின் ஆடல் பாடல்களில், அவைபற்றிய குறிப்புகளில் நாம் விரிவாக அறிகிறோம். -

கோவலனும் கண்ணகியும் மதுரைப் பயணத்தைத் தொடங்கப் புகாரைவிட்டு நீங்கினர். புகார் நகரைவிட்டு நீங்கியதும், "அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து என்று - அஃதாவது, அழகுமிக்க ஆதிசேடன்பtது அறிதுயில் கொண்டுள்ள மணிவண்ணனான திருமால் திருக்கோயிலை வலம் வந்துவிட்டு - அதற்கப்பால் சென்றனர்” என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். - - கோவலனும் கண்ணகியும் கவுந்தியடிகளும் காவிரிக்கரை வழியாக ஒரு நாளுக்குக் காத துரம் வீதம் நடந்து மதுரையை நோக்கிச் சென்றனர். செல்லும் வழியில் "ஆற்றுவி யரங்கத்து வீற்றுவிற் றாகி" என்று ஆற்றிடைப் பட்ட அழகுமிக்க திருவரங்கத்தை அடைந்தனர். திருவரங்கத்தைப்பற்றி அடிகளார் குறிப்பிடும்போது அது அழகுமிக்கது, சிறப்புமிக்கது, சோலைகள் சூழ்ந்தது, தங்கு வதற்கு அனைவரும் விரும்பும் மலர் மனம்மிக்கது என்றெல்லாம் குறிப்பிடுகிறார். - - பின்னர், மூவரும் உறையூரைக் கடந்து, நீர்வளம்மிக்க வயல்வெளிகளும் குளங்களும் நிறைந்த ஒரு சோலையில் உள்ள மண்டபத்தை அடைந்து, அங்கு அமர்ந்திருந்தனர் அங்கு ஒரு முதிய மறையோனைக் கண்டனர். அவன்