பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 141

-

ாது.பையின் சிறப்புகளைப்பற்றியும், பாண்டிய மன்னனின் ப.ia |களைப்பற்றியும் பெருமைகளைப்பற்றியும் கூறிக் 1... .ண்டி ருந்தான். அவனை யாரென வினவ,

"மாமறை யாளன் வருபொருள் உரைப்போன்

நீல மேகம் நெடும்பொன் குன்றத்துப் பால்விரிந்) தகலாது படிந்தது போல ஆயிரம் விரிந்தெழு தலையுடை அருந்திறல் பாயல் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் விங்குநீர் அருவி வேங்கடம் என்னும் ஒங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி இருமருங்கு ஓங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கொடி உடுத்து விளங்குவில் பூண்டு நன்னிற மேகம் நின்றது போலப் - பகையணங்கு ஆழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி நலம்கிளர் ஆரம் மார்பில் பூண்டு பொலம்பூ வாடையின் பொலிந்து தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென்று என்னுளம் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்” . .ன்று அந்த மாங் காட்டு மறையோன் கூறியதை இளங்கோவடிகள் குறிப்பிட்டுக் காட்டுகிறார். * -

கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகருக்குச் செல்வதற்காகப் புகார் நகரத்திலிருந்து புறப்பட்டுத் திருமால் திருக்கோயிலை வலம் வந்துவிட்டு, கவுந்தி அடிகளின் துணை கொண்டு, திருவரங்கம் அடைந்து, காவிரியைக் கடந்து உறையூரைத் தாண்டிச் சோலை மண்டபத்தில் தங்கி யிருந்தனர். மதுரை செல்வதற்கு யாரிடமாவது வழி கேட்க வேண்டும் இளங்கோவடிகளார் மிகவும் சிறப்பான முறையில் தமது காப்பியத்தின் கதையைக் கொண்டுசெல்வதைக் காண்கிறோம்.