பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,42 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

கோவலனுக்கு மதுரை செல்வதற்கு வழி விவரம் கூறுவதற்கு மாங்காட்டு மறையோன் வருகிறார். அந்த மாங்காட்டு மறையோனோ திருவரங்கத்தில் திருமாவின் கிடந்த வண்ணத்தையும், திருவேங்கடத்தில் நின்ற வண்ணத்தையும் காண்பதற்கு யாத்திரைப் பயணம் வந்தவர். இளங்கோவடிகளார் அக்காலத்தில் கோயில்களுக்கு மக்கள் யாத்திரை செல்வதைப்பற்றியும் மிக நுட்பமாக மாடல மறையோன் மூலமாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

மக்களிடம் அக்காலத்தில் பழக்கத்தில் இருந்த திருமால் வழிபாட்டு முறைகளைக் கம்பனும் ஆழ்வார்களும் தங்கள் கவி வண்ணங்களில் குறிப்பிடுவதைப் போலவே இளங்கோவடிகளும் மிகவும் சிறப்பாகக் குறிப்பிடுவதைக் 9-то осторп др. -

கல்லாய்ச் சபிக்கப்பட்டுக் கிடந்த அகலிகை இராமனது கழல் துகள் பட்டவுடன் உயிர் பெற்றுத் தனது பழைய வடிவத்தைப் பெறுகிறாள். ஏற்கனவே இராமபிரானது கணைபட்டுத் தாடகி வீழ்ந்தாள். இக்காட்சிகளை,

"இவ்வண்ணம் நிக்ழ்ந்த வண்ணம்,

இனிஇந்த உலகுக் கெல்லாம் உயப்வண்ணம் அன்றி மற்றோர்

துயர்வண்ணம் உறுவ துண்டோ? மைவண்ணத்து அரக்கி போரில்

மழைவண்ணத்து அண்ண லேஉன் கைவண்ணம் அங்கு கண்டேன்,

கால்வண்ணம் இங்கு கண்டேன்” என்று கம்ப நாட்டாழ்வார் மிகவும் அழகாகக் குறிப்பிடுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.

"பொப்வண்ணம் மனத்தகற்றிப் புலன்ஐந்தும் செலவைத்து மெய்வண்ணம் நினைந்தவர்க்கு மெய்ந்நின்ற வித்தகனை மைவண்ணம் கருமுகில்போல் திகழ்வண்ண மரகதத்தின் அவ்வண்ண வண்ணனையான் கண்டது.தென் னரங்கத்தே!" என்று திருமங்கையாழ்வார் பெருமான் பாடுவதையும் காண்கிறோம். *

திருவரங்கத்தில் திருமால் கிடந்த வண்ணத்தையும், திருவேங்கடத்தில் நின்ற வண்ணத்தையும் மாங்காட்டு