பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 147

கறியிருப்பதையும், மக்களுடைய வாழ்க்கை அனுபவத்தின்

பக்கத்தில் இருப்பதையும் காண்கிறோம்.

திருமாலி ருஞ்சோலையில் உள்ள புண்ணிய த்தங்களில், புண்ணிய சரவணம் என்னும் பொய்கையில் | படி னால் இந்திரன் போன்றோர் கூறியுள்ள ஐந்திரங்களின் தத்துவங்களையும் இலக்கணங்களையும் அறிந்தவராவீர் . .ன்றும், பவகாரணி என்னும் பொய்கையில் நீராடினால் பிறப்பின் காரணங்களை அறிந்துகொள்வீர் என்றும், இட் சித்தி என்னும் தடாகத்தில் நீராடினால் உங்களுடைய நல்ல விருப்பங்கள் நிறைவேறும் என்றும் மாங்காட்டு மறையோன் விவரித்துக் கூறுவதைச் சிலப்பதிகாரக் 1. ப்பியம் குறிப்பிடுகிறது.

'அந்த மலைக்குகைக்குள்ளே நீங்கள் செல்ல வேண்டுமாயின் ஒங்கி உயர்ந்துள்ள அம்மலையில் . ழுந்தருளியுள்ள திருமாலை வனங்கி, அவனது திருவடிகளை உங்கள் சிந்தையில் வைத்து, அம்மலையை மும்முறை வலம் வந்தால், நிலத்தைப் பிளந்து செல்லும் ஆழமான சிலம்பாற்றின் அகலமான கரையில் நறுமண மலர்கள் நிறைந்த வேங்கை மரத்தின்கீழ் கரிய மேகத்தைப் போன்ற கூந்தலையுடைய, வளைந்த வளையல்களை அணிந் ஒர் இயக்க மாது தோன்றுவாள்.

"ஆங்குப் பிலம்புக வேண்டுதிர் ஆயின்

ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது சிந்தையில் அவன்தன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலஞ் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலைப் பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தல் கடிமலர் அவிழ்ந்த கன்னிகா ரத்துத் தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி" என்று சிலப்பதிகாரக் காப்பியம் குறிப்பிடுகிறது.

அவ்வாறு தோன்றிய மலைமாது,