பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும்

இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதும் செப்புமின் நீயிர்இவ் வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்" என்று காப்பியம் குறிப்பிடுகிறது.

இங்கு ஒரு முக்கியமான தத்துவப் பிரச்சினை முன் வைக்கப்படுகிறது. அதுபற்றிச் சமயக் கணக்கர் பலரும் விடை காண முயன்றுள்ளனர்.

'இம்மைக்கு இன்பமும் மறுமைக்கு இன்பமும் இரண்டும் இன்றி எப்போதும் துயதாய்ச் செம்மையாய் நிற்கும் இன்பமும் என்னவென்று கூறுங்களென்று” குறிப்பிடுகிறார்.

இந்தக் கேள்விக்குச் சரியான விடை கூறினால், கதவுகள் திறக்கப்படும். நெடுகிலும் சென்றால் இடைப்பட்ட கதவுகளும் திறந்து, அதன் பின் மூன்று புண்ணிய தீர்த்தங்களின் கரைகளை அடையலாம். அப்புண்ணிய தீர்த்தங்களில் விரும்பிய ஒன்றில் நீராடலாம்.

அரிய வேதங்களில் உணர்த்தப்பட்டுள்ள ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்களை உச்சரித்து, மனத்தில் இருத்தி, அப்புண்ணிய தீர்த்தத்தில் நீராடுங்கள். மலர்மிசை நின்ற திருமாலின் அழகிய தாமரை மலர் போன்ற திருவடிகளை உங்கள் உள்ளத்தில் ஒன்றி நினையுங்கள். அவ்வாறு உள்ளத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்தால் அத்திருமாலின் கருடக்கொடி பறக்கும் நீண்ட கொடிமரம் தெரியும். அவனது மலர் போன்ற திருவடிகள் உங்களை ஏற்றுக்கொள்ளும். உங்கள் துயரங்கள் தீரும். எல்லா இன்பங்களும் பெறுவீர்கள்.

"உரைத்தார்க் குரியேன் உரைத்தி ராயின்

திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவுஎனும் கதவம் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலஉள போகிடை கழியன ஒட்டுப் புதவமொன்று உண்டதன் உம்பர் வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி இறுதியில் இன்பம் எனக்கீங்கு உரைத்தால்