பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 149

பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும் உரையீ ராயினும் உறுகண் செய்யேன் நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்எனும் உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திரம் இரண்டும் ஒருமுறை யாக உளங்கொண்டு ஒதி வேண்டிய தொன்றின் விரும்பினி ராடின் காண்டகு மரபின அல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்றவன் புள்அணி நீள்கொடி புனர்நிலை தோன்றும் தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளினை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக்கு ஏகுமின்” என்று மாங்காட்டு மறையோன் கூறுவதைக் காப்பியம் மிகச் பிறப்பாக விவரிக்கிறது.

இங்கு மாங்காட்டு மறையோன் வாயிலாகச் சிறந்த வைணவக் கருத்துகளையும் வழிபாட்டு முறைகளையும் இளங்கோவடிகள் சிறப்பாகக் குறிப்பிடுவதைக் காண்கிறோம்.

திருமாலிருஞ்சோலை, அதன் அழகிய தோற்றம், வளமான சூழல்கள், வயல்வெளிகள், குளங்கள், ஏரிகள், புண்ணிய தீர்த்தங்கள், மலைக்குகைகள் முதலியவைபற்றியும் அப்புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் பலன்கள்பற்றியும், இம்மையில் இன்பம், மறுமையில் இன்பம் இரண்டும் இன்றி எப்போதும் செம்மையாய் நிற்கும் உயர்நிலைபற்றியும், அரிய வேதங்களில் உணர்த்தப்பட்டுள்ள ஐந்தெழுத்து எட்டெழுத்து மந்திரங்கள்பற்றியும், மனத்தை ஒருநிலைப் படுத்தித் தியானித்தல்பற்றியும், திருமாலை உள்ளத்தில் நிலைநிறுத்தல்பற்றியும், கருடக்கொடி தோன்றித் திருமால் தனது திருவடிகளில் நம்மை இணைத்துக்கொண்டு அதன்மூலம் எல்லாத் துயர்களும் நீங்கி இன்பம் எய்தும்