பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

உன்னத நிலையை அடைவதுபற்றியும் கூறப்படும் வை. தத்துவம் மிகவும் சிறப்பாக இங்கு எடுத்துக் பட்டுள்ளதைக் காண்கிறோம்.

சிலப்பதிகாரக் காப்பியத்தில் மதுரைக் காண் விறுவிறுப்பானது. கதை நிகழ்ச்சிப் போக்குகள் நிறை , காணப்படுவது. அவை நாடகக் காட்சிகள் .ே . ஒவ்வொன்றும் வேகமாகச் செல்கின்றன. சிலப்பதி. காப்பியத்தின் கதைக்கருக்கள் மதுரைக் காண்டத்தில் நிறை , பெறுகின்றன. __

ஊழ்வினை விளைவால் கோவலன் கொல்லப்படுவது அரசியல் பிழைத்த காரணத்தால் பாண்டிய மன்னனு . அறம் கூற்றாவதும், உரைசால் பத்தினியின் கற்பின் திறத்து. . மதுரை தீக்கிரையாவதும் இக்காண்டத்தின் அவ. காட்சிகளாகும்.

கோவலன் கொலையுண்டபோது ஆயர்பாடியில் . தீ நிமித்தங்கள் தோன்றுகின்றன. தியனவற்றிலிருந் . மக்களையும் ஆநிரைகளையும் காப்பாற்றுமாறு கண்ன. வேண்டுவது ஆயர்பாடி மக்களின் ஆடல்பாடல்க.. வழிபாடுகளுமாகும்.

பெருமழை, புயல்காற்று, கடும்வெப்பம், நோ நொடிகள், கொடிய மிருகங்களின் தாக்குதல்கள் முதலிய பல வேறு இயற்கைச் சீற்றங்கள், தீமைகள் முதலியவற்றி லிருந்து மக்களையும், தங்கள் கால்நடைச் செல்வங்களையு. காப்பதற்குக் காத்தல் கடவுளான கண்ணனை வழிபடுவது. யாதவ குல மக்களின் இயல்பான வாழ்க்கை முறையி. பகுதியாகும். அத்துடன் கண்ணன் காட்சி விரிவுபட்டு அவ. பாரத பூமியின் குலதெய்வமாக உலகப் பெருவடிவமாக நமக்குக் காட்சியளிக்கிறான். இதை ஆழ்வார்கள் மேலும் சிறப்பாக நமக்கு எடுத்துக்காட்டுகிறார்கள்.

பாரத பூமியின் இந்தக் குலதெய்வத்தை வழிபட்டுப் பாடப்படும் பாடல்களாகச் சிலப்பதிகாரக் காப்பியத்தி. மதுரைக் காண்டத்தில் ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் அமைந்துள்ளன.