பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 157

வன்று காப்பிய அடிகள் குறிப்பிடுகின்றன. இவ்வாறு ஆடத் துெ க்கினர் என்பதாகும்.

முதலில் சமநிலையாக வரிசையில் நின்று, பின் கை யோத்துக்கொண்டு வட்ட வடிவமாகச் சுற்றி நின்றுகொண்டு தாளத்திற்கேற்ப அடிவைத்து அதில் மாயவன் வேடத்தில் இருப்பவள் தனது துணையை நோக்கி, "விரிவான கொல்லைப் புனத்தில் வஞ்சகமாக வந்து நின்ற குருந்த பத்தினை முரித்த மாயவனை முல்லைப் பண்ணால் படுவோம்" என்று கூற, அனைவரும் அவ்வாறே பாடத் தொடங்கினர். அப்போது குரல் தானத்தில் இருந்தவள் மெல்லிய குரலிலும் இளி தானத்தில் இருந்தவள் சற்று சமநிலையான குரலிலும், துத்த தானத்தில் இருந்தவள் சற்று வலிய சுரத்திலும் ஒலி கிளப்பியும், விளரி தானத்தில் இருந்தவள் மந்தமான சுரத்திலும் பாட நப்பின்னை வேடத்தில் இருந்தவள் தொடர்ந்து பாடினாள் என்று இளங்கோவடிகள் மிக நுட்பமாகக் கூத்தில் கலந்துகொண்ட பெண்களின் ஆடல் பாடல் முறைகளை மிக அழகாக வர்ணித்தும் விவரித்தும் கூறுவதைக் காணலாம்.

பாட்டு தொடங்குகிறது. முதலில் மாயவனின் குழலிசையைக் கேட்போம் என்று பாடத் தொடங்கு கிறார்கள். இந்த இசையின் இனிமை தனித்தன்மையானதாக நம்மை மகிழ்விக்கிறது.

1. “கன்று குனரிலாக் கணிஉதிர்த்த மாயவன்

இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையம் தீங்குழல் கேளாமோ தோழி' பசுக் கூட்டத்திற்குள் கஞ்சன் ஏவிய அரக்கன் வஞ்சனையாகக் கன்று வடிவத்தில் நுழைந்தபோது அக்கன்றினையே பிடித்து, அதையே குறுந்தடியாகக் கொண்டு அவ்வாறே நின்ற விளவின் கனியை உதிர்த்த கண்ணன், இன்று நமது வழிபாட்டால் நமது பசுக் கூட்டத்திற்குள் வருவானாகில் அவனது இனிய வாயினால் ஊதும் கொன்றைக் குழலிசையைக் காதாரக் கேட்போம், தோழி.