பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 159

1. "இறுமென் சாயல் நுடங்க நுடங்கி

அறுவை ஒளித்தான் வடிவுஎன் கோயாம் அறுவை ஒளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகம்என் கோயாம்." ஒடிந்து விழுந்துவிடுமோ எனக் கூறத் தக்க வகையில் இடை துவளும்வண்ணம் அசைந்து வரும் ஆயர் மகளின் ஆடைகளை ஒளித்து வைத்த கண்ணனது வடிவழகை நாம் புகழ்ந்து பாடி மகிழ்வோமா அல்லது அந்த ஆடைகளை ஒளித்தவன் அவள் தனது துகிலின்மையைக் கண்டு அயர்வுற அதைக் கண்டு நெகிழும் அந்த ஆயர் மகளின் அழகினைப் புகழ்ந்து பாடுவோமா?

2. "வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள் நெஞ்சம் கவர்ந்தாள் நிறைஎன் கோயாம் நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சம் செய்தான் வடிவுஎன் கோயாம்” யமுனையாற்றில் நீராடும்போது தன்னை வஞ்சித்தவனது உள்ளம் கவர்ந்தவளது அழகை நாம் பா டுவோமா அல்லது அவ்வாறு தனது உள்ளம் கவர்ந்தவளது அழகையும் ஆடைகளையும் வளையல்களை யும் கவர்ந்துகொண்டவனது வடிவழகை நாம் புகழ்ந்து பாடுவோமா?

3. "தையல் கலையும் வளையும் இழந்தே

கையில் ஒளித்தாள் முகம்என் கோயாம் கையில் ஒளித்தாள் முகம்கண் டழுங்கி மையல் உழந்தான் வடிவென் கோயாம். "ஆடைகளையும் வளையல்களையும் இழந்து நானத்துடன் தமது உடலைக் கைகளால் மறைத்துக் கொண்டிருக்கும் அந்த அழகிய பெண்களின் முகத்தழகைப் பாடுவோமா அல்லது கைகளினால் தனது உடலை மறைத்துக்கொண்டிருப்பவளது முக அழகைக் கண்டு இரக்கமுற்று அவள்மீது மையல் கொண்டுள்ள அக் கண்ணனது வடிவழகையே நாம் புகழ்ந்து பாடுவோமா?" என்று மனம் கசிந்து பக்திச் சுவையுடன் பாடுகின்றனர். மேலும் ஆடல் பாடல் தொடர்கிறது.