பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

1. "கதிர்திகிரி யான்மறைந்த கடல்வண்ணன் இடத்துளாள்

மதுபுரையும் நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தல் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார் 2. "மயில்எருத்து உறழ்மேனி மாயவன் வலத்துளாள்

பயில்இதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயில்எருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்" என்று பாடி ஆடுகின்றனர்.

கதிர் வீசும் சூரிய மண்டலத்தைத் தனது சக்கரத்தால் மறைத்த கடல் போன்ற நீல நிறத்தையுடைய கண்ண பெருமானுடைய இடப்பக்கத்தே உள்ளவளும், சந்திரனைப் போன்ற துய வெண்மை நிறம் கொண்ட, கண்ணனுக்கு மூத்தவனான பலதேவனுக்கு வலப்பக்கத்தே உள்ளவளும், கட்டவிழ்ந்து மலர்கின்ற மாலையை அணிந்த கருங் கூந்தலையுடையவளுமான நப்பின்னையின் ஆடல் பாடல்களுக்கேற்றவாறு பழைய மறைகளின் பொருளை முழுதும் உணர்ந்தவரும் இசை ஞானத்தில் சிறந்தவரும் குரல் நரம்பை முறையாக வாசிப்பவருமான நாரத னார் இசையமைத்து பக்கவாத்தியம் இசைத்தார் என்னும் பொருள்பட இங்குக் கூறியிருப்பது மிகச் சிறப்பான கருத்தாகும்.

இன்னும், மயிலினது நீண்ட புறக்கழுத்தின் நிறத்தைப் போன்ற திருமேனிகொண்ட கண்ண பெருமானின் வலப்பக்கத்திலே உள்ளவளும், நெருக்கமான இதழ்களைக் கொண்ட மல்லிகை மலர் போன்ற வெண்ணிறத்தையுடைய அவனுடைய முன்னோனான பல தேவனுடைய இடப்பக்கத்தே உள்ளவளும், புறக்கழுத்தாகிய பிடரியை வளைத்து நின்று ஆடுபவளுமான நப்பின்னையின் ஆடல் பாடல்களுக்கு ஏற்றவாறு அதை உறுதிப்படுத்தும் முறையில் காத்து நிற்பவர், இசைக்கருவிகளை வாசிப்பவர்க்ளுள் மிகச் சிறந்தவருள் சிறந்தவரும், பண்னோடு கூடிய தாளத்திற்கும் ஏற்றவாறு தமது யாழ் நரம்பினை உருவி வாசிப்பவருமாகிய நாரதனார் ஆகும் என்று இங்கு அடிகளார் குறிப்பிடுகிறார்.