பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

உனது நீண்ட பெரிய கைகள்தாமே அசோதைப் பிராட்டியாரின் தயிர் கடையும் சிறிய கயிற்றினாலே கட்டுண்ட கை என்பர். இது என்ன மாயமோ ! இச்செய்தி எமக்கு மிக்க வியப்பை அளிக்கிறதே !

2. வளமான துளபமாலையை அணிந்த திருமாலே, நின்னைப் பொருளாகக் கண்ட பொருள் அனைத்திற்கும் முதற்பொருள் இத்திருமாலேயாவான் என ஐயமறத் தெளிந்து அமரர்கள் கூட்டமெல்லாம் கை கூப்பித் தொழுது நிற்ப, மிக்க பசிப்பிணியொன்றும் இல்லாமலேயே உலகம் முழுவதையும் உண்டாயல்லையோ! அவ்வாறு உலகம் உண்ட பெருவாய்தானோ, எளிய ஆய்ச்சியர்களின் வீடுகளிலே களவு செய்து, அவர்களுடைய உறிகளில் வைத்திருந்த வெண்ணெயை உண்ட வாய் என்று கூறுவது என்ன மாயமோ? அச்செயல் நமக்கு மிக்க வியப்பை யளிக்கிறது.

இப்பாடலில் "அறுபொருள் இவன் என்றே அமரர்கள் தொழுதேத்த" என்று திருமாலைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுவது ஒரு தனிச் சிறப்பான கருத்தாகும். "அறுபொருள்” என்பதற்கு "முடிவான பொருள்” என்றும், "தீர்ந்த பொருள்” என்றும், "அறுதியிட்ட பொருள்" என்றும் "ஐயமற்ற பொருள்” என்றும், "அறுவகைச் சமயத்தாரும் துணிந்த பொருள்” என்றும் "முழுமுதற் பொருள் இவனே' என்றும் உரையாசிரியர்கள் கூறுகிறார்கள். -

கம்பன் தனது சிறப்புமிக்க இராமாவதாரப் பெருங்காவியத்தில் இராமநாமத்தின் சிறப்புப்பற்றி, "மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந் திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமம் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான்" என்றும், இன்னும்,

"மூவர்நீ, முதல்வன்நீ, முற்றும்நீ, மற்றும்நீ பாவம்நீ தருமம்நீ பகையும்நீ உறவும்நீ” என்று வாலி வதைப் படலத்திலும்,