பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 167 "இந்திரனும் இமையவரும் முனிவர்களும் எழிலமைந்த

சந்தமலர்ச் சதுமுகனும் கதிரவனும் சந்திரனும் எந்தைஎமக் குள்எனநின் றருளும்இடம்" என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார். "குடிகுடி யாகக் கூடிநின் றமரர்நின்

குணங்களே பிதற்றிநின் றேத்த" என்றும் திருமங்கையாழ்வார் பாடுவதைக் காண்கிறோம்.

"அன்றியாம் ஒருபுக லிடம்இலம் என்றென் றரற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட" என்று திருமோகூர்ப் பெருமானைக் குறித்து நம்மாழ்வார் படுகிறார்.

"அருளை யீயென் அம்மானே

என்னும் முக்கண் அம்மானும்

தெருள்கொள் பிரமன் அம்மானும்

தேவர் கோனும் தேவரும்

இருள்கள் கடியும் முனிவரும்

ஏத்தும் அம்மான் திருமலை

மருள்கள் கடியும் மணிமலை

திருமா லிருஞ்சோ லைமலையே”

என்றும் நம்மாழ்வார் பாடுகிறார்.

ஆய்ச்சியர் குரவையில் அடுத்தபடியாகத் திருமாலைப் படர்க்கையில் முன்வைத்து அழகான பாடல்கள் வருகின்றன. அவை :

1. மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான்போந்து சோவரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே.

2. பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம்

விரிகமல உந்தியிடை விண்ணவனைக் கண்னும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ண்ே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்னென்ன கண்ணே!