பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருமாலின் அழகான அங்க வடிவங்கள் அனைத்தை யும் கண் இமைக்காமல் கண்டுகளித்து ஆனந்தப்படவேண்டும் என்று ஆயர்பாடி மகளிர் பாடுகிறார்கள்.

3. மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்

கடந்தானை நூற்றுவர்.பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்துஆ ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் துது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராய னாவென்னா நாவென்ன நாவே ! என்றுயாம், r கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம்தம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோள் தென்னவன் கடிப்பிகு முரசே” என்று காப்பிய அடிகள் ஆய்ச்சியர் குரவைக் காதையில் குறிப்பிடுகின்றன.

1. மாவலி கூறியபடி நீ நிலத்தை அளக்கும்போது உன்னுடைய இரண்டடிகளுக்கும் முறையாக நிரம்பா வண்ணம் மூன்று உலகங்களும் முடிந்து போகும்படி முன்பு அளந்தருளினாய். அந்தத் திருவடிகள் இயற்கையிலேயே சிவந்தவை. அந்தச் சிவந்த அடிகளில் கல்லும் முள்ளும் பட்டுக் கொப்புளங்கள் ஏற்பட்டு, மேலும் சிவப்பாகி, உனது தம்பியான இலக்குவனோடு பதினான்கு ஆண்டுகள் காடுகளிலே திரிந்து, இலங்கையின் சோவென்னும் வலுவான மதிலரணும் அதனுள்ளேயிருந்த அரக்கர் கூட்டமும் போர்க் களத்திலே அழிந்தொழியும்படி அவ்விலங்கையின் காவலை அழித்துத் தன் அன்பர்களுக்குத் தொண்டுசெய்த இராமனுடைய புகழினைக் கேட்காத செவிகளும் செவிகளாகுமோ? அந்தத் திருமாலாகிய இறைவனுடைய புகழைக் கேட்காத செவிகள் செவிகளாகுமோ?” என்றும்,

2. கடவுள்களுள் வைத்து முழு முதலான பெரிய கடவுளாக விளங்கும் திருமாலை நாமெல்லாம் சிறிதளவும்