பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 169

அறியவொண்ணாத அருஞ்செயல்கள் பலவும் மாயங்கள் பலவும் செய்வதற்கு வல்லவனான மாயவன் என்னும் பெயர் படைத்த திருமாலை, ஐம்பெரும் பூதங்களும் எண்ணற்ற ம யிர்ப்பொருள்களும் இதர உலகப்பொருள்களனைத்தும் அடங்கிய இப்பேருலகையெல்லாம் தோற்றுவித்து அவைகளை விரிவடையச் செய்வதற்குக் காரணமான பொற்றாமரை பூத்த உந்தியைக்கொண்ட விண்ணவனான திருமாலை, அவனுடைய பெரும் உருவத்தில் உள்ள கண்களும் திருவடிகளும் கைகளும் திருவாயும் வெந்தனவாகவும் ஏனைய உறுப்புகளெல்லாம் கரிய நிறம் கொண்டனவாகவுள்ள நமது இறைவனான திருமாலின் திருவுருவத்தைக் காணப்பெறாத கண்கள் என்ன கண்களோ? அத்திருமாலின் பெருவடிவத்தைக் காணும்போது இமைகள் கொட்டாமல் காணவேண்டும். அவ்வாறு இமை கொட்டாமல் காணாத கண்கள் கண்களல்லவென்று ஆய்ச்சியர்கள் பாடுவதை இளங்கோவடிகளார் மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார்.

இங்கு திருமாலை, "பெரியவனை, மாயவனை, பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியிடை விண்ணவனை என்று இளங்கோவடிகள் குறிப்பிட்டிருப்பது ஆழ்வார்கள் திருமாலைப் பெருமையுடன் குறிப்பிடுவதற்கு ஒப்பாக விளங்குவதைக் காணலாம். திருமாலை இப்பேருலகின் வடிவமாகக் காணும் ஆழ்வார்களின் தத்துவ நிலைக்கு ஒப்பதாகவும் அடிகளாரின் காப்பிய அடிகள் அமைந் திருப்பதைக் காண்கிறோம்.

"முற்ற உலகெலாம் நீயே யாகி

மூன்றெழுத் தாய முதல்வ னேயோ" என்றும்,

"உய்ய உலகு படைக்க வேண்டி

உந்தியில் தோற்றினாய் நான்முகனை"

என்றும், ---

“மண்ணொடு நீரும் எரியும் காலும்

மற்றும்ஆ காசமு மாகி நின்றாய்” என்றும் பெரியாழ்வார் பாடுகிறார்.