பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"கலைகளும், வேதமும் நீதி நூலும்

கற்பமும் சொற்பொருள் தானும் மற்றை நிலைகளும் வான வர்க்கும் பிறர்க்கும்

நீர்மையி னால்அருள் செய்து நீண்ட மலைக ளும்மா மணியும் மலர்மேல்

மங்கையும் சங்கமும் தங்கு கின்ற அலைகடல் போன்றவர் ஆர்கொல்?” என்று அட்ட புய கரத்துத் திருமாலைத் திருமங்கையாழ்வார் சிறப்பித்துப் பாடுகிறார்.

"யாவருமாய், யாவையுமாய் எழில்வேதப் பொருள்களுமாய்

மூவருமாய் முதலாய மூர்த்தி” என்றும்,

"வானாடும், மண்ணாடும் மற்றுள்ள பல்லுயிரும்

தானாய எம்பெருமான் தலைவன்" என்றும்,

"அண்டமும் இவ்வலைவாய்க் கடலும்

அவனிகளும் குலவரையும் உண்ட பிரான்” என்றும் திருமங்கையாழ்வார் பாடுகிறார்.

"நீராய் நிலனாய்த் தீயாப்க் காலாப் நெடுவானாயப்

சீரார் சுடர்க ளிரண்டாய்ச் சிவனாய் அயனாயப் கூரார் ஆழி வெண்சங் கேந்திக் கொடியேன்பால் வாராயப்" என்றும்,

"மண்ணும் விண்னும் மகிழக் குறளாப் வலங்காட்டி மண்ணும் விண்ணும் கொண்ட மாய அம்மானே!" என்றும்,

"ஞாலத் துாடே நடந்தும் நின்றும் கிடந்திருந்தும்

சாலப் பலநாள் உகந்தோ றுயிர்கள் காப்பானே" என்றும் நம்மாழ்வார் பெரியவனை மாயவனைப் பாடுகிறார்.

'பிறந்த மாயா! பாரதம்

பொருத மாயா! நீயின்னே சிறந்த கால்தீ நீர்வான்மண்

பிறவு மாய பெருமானே