பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அற்புதமான முறையில் ஆயர் மகளிர் பாடுவதை இளங்கோவடிகளார் எடுத்துக் கூறியுள்ள சிறந்த காட்சியைக் காண்கிறோம்.

ஆழ்வார்கள் மிகுந்த பக்திப் பரவசத்துடன் திருமாலைப் பல வடிவங்களிலும், பல நாமங்களிலும், பல உருவங்களிலும், பல பரிமானங்களிலும் அவனுடைய அற்புதச் செயல்களையும் அரிய லீலைகளையும் பாடுவதைக் கேட்டுப் பரவசமடைகிறோம்.

"அன்புஆழி யானை யனுகென்னும் நா.அவன்றன்

பண்புஆழித் தோள்பரவி யேத்தென்னும் - முன்பூழி கானானைக் காண்என்னும் கண்செவி கேள்என்னும் பூனாரம் பூண்டான் புகழ்” என்று பொய்கையாழ்வார் தமது இயற்பாவில் மிக அழகாகப் பாடுகிறார்.

இனி, கஞ்சனது வஞ்சத்தை எதிர்த்துக் கண்ணன் வெற்றி கண்டதுபற்றியும், பஞ்சவர்க்குத் துதாக நடந்தது பற்றியும் ஆழ்வார்கள் பல பாடல்களிலும் குறிப் பிட்டுள்ளதைக் காண்கிறோம்.

ஆய்ச்சியர் குரவைக் கூத்தின் அந்த ஆடல்பாடல்களின் நிறைவாக "நாம் தொகுத்துப் பாடி ஆடிய குரவைக் கூத்துள் போற்றிய கடவுள் நமது பசுக்களுக்கு நேர்ந்த துன்பங்களை நீக்கிடுக, வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்டுள்ள இந்திரனுடைய முடியைத் தகர்த்த தொடி பொருந்திய தோள்களைக் கொண்ட பாண்டிய மன்னனுடைய குறுந்தடியால் எறியப்படும் முரசு, வேற்று அரசர்கள் பயம் கொள்ளும்படி நாள்தோறும் பகைவர்களை வென்று தென்னவனுக்கு வெற்றியை அளித்து முழங்குவதாக" என்று பாடி முடித்துக் குரவைக் கூத்து நிறைவுபெறுகிறது.

சேரன் செங்குட்டுவன் கண்ணகி சிலைக்காகக் கல்லெடுக்கத் தனது படைகளுடன் இமயத்தை நோக்கிப் புறப்பட்டான். போருக்குப் புறப்படும் மன்னனுக்குக் கோயில் களிலிருந்து பூசை செய்யப்பட்ட வாழ்த்துகள், மலர் மாலைகள் இதர பிரசாதங்கள் வருகின்றன. சேரன் செங்குட்டுவன் யாருக்கும் தலை வனங்காதவன்.