பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 177

குழந்தையைப்பற்றி, அதன் அழகைப்பற்றி, அதன் அங்கச் சிறப்புகளைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி ஆனந்தப் படுகிறாள். தனது குழந்தையைப்பற்றி மற்றவர்கள் புகழ்ந்து கூறும்போது அத்தாய் பெருமகிழ்ச்சியடைகிறாள்.

பாரத நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தில் குடும்பம், இல்லறம், பெண்ணின் பெருமை, தாய்மை, தாயின் தலைமை ஆகியவை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. வள்ளுவப் பேராசான் இல்லறத்திற்கு முதலிடம் கொடுத்திருப்பதை அறிவோம். கம்பன் பெண்ணின் பெருமையை மனைமாட்சி என்று உயர்த்திக் காட்டுகிறார். இளங்கோவடிகள் இல்லறத்தின் பெருமையைப் பெருமைப்படுத்திக் கூறுகிறார்.

ஆழ்வார்கள் திருமாலைக் கண்ணபிரானைக் குழந்தையாகக் காதலனாகப் பாவித்து மிக அருமையாகப் பக்திப் பெருமிதத்துடன் பாடுகிறார்கள்.

- பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து அவனுடைய பல வேறு பருவங்களையும் குழந்தைகளுக்கு நாம் நடத்தும் விழாக்கள்பற்றியும் பெருமையுடன் பாடுகிறார். கண்ணனைக் குழந்தையாகப் பெற்ற அசோதைப் பெருமாட்டி பெருமகிழ்ச்சியடைகிறாள். கண்ணனின் வடிவழகை, அடிமுதல் முடிவரை கண்ணனின் அங்க அழகை, மணிவண்ணனின் பாத கமலங்கள், அவற்றில் அமைந்துள்ள பத்து விரல்கள், கணைக்கால், முழந்தாள், தொடைகள், உந்தி, வயிறு, மார்பு, தோள்கள், நேமியும் சக்கரமும் நிலவும் கைத்தலங்கள், அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய கண்டம் பாய், நம்பியின் வாக்கு, நயனம், வாயின் முறுவலும் மூக்குமுள்ள முகம், கண்கள், புருவம், செவிகள், துதல், முடி முதலிய ஒவ்வொன்றைப்பற்றியும், கண்ணனின் அனைத்து அங்கங்களைப்பற்றியும் அசோதைப் பிராட்டி கண்டு, கண்டு அவனுடைய அழகைப் பருகுவது, ஒவ்வொரு தாயும் தனது குழந்தையின் அழகைக் கண்டு, அக்குழந்தையைக் கண்ணனாகவே பாவித்து மகிழ்வது பெரியாழ்வார் பெருமானின் பாட்டமுதமாகும். இது குழந்தையின்பத்தை