பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

வாழ்க்கையின்பத்தின் பகுதியாக அனுபவித்து மகிழ்வதாகும். இதில் நமது இலக்கியம் தனித் தன்மை பெற்றுத் திகழ்கிறது. தாலாட்டு

குழந்தைகளைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதும், தாலாட்டுப் பாடுவதும் நமது தனிமரபு. பாரத நாட்டில் தாலாட்டுப் பாடல் ஒரு தனி இலக்கியம். இதில் வயல் வெளிகளில் பணிபுரியும் பெண்கள், ஆலைகளில் பணியாற்றும் தாய்மார்கள், ஆடுமாடுகளைப் பராமரிக்கும் ஆயர்குலப்பெண்கள் முதல், அரண்மனையில் வளரும் குழந்தைகள்வரை அனைவருக்கும் தாலாட்டுப் பாடல்கள் மக்களை ஈர்க்கும் தனிப்பாடல்களாகும். தாலாட்டுப் பாடல்களைக் கேட்டு மயங்காத குழந்தைகளில்லை, பெரியோர்களில்லை. "பட்டுண்டோ செட்டி, பவளமுண்டோ வியாபாரி என்று தாய்பாடும் தாலாட்டைத் தந்தையும் கேட்டு மகிழ்வது நமது குடும்பப் பிணைப்பாகும்.

கண்ணனை அசோதை தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகிறாள். இதைப் பெரியாழ்வார் கண்ணனின் உலகப் பெருவடிவத்துடன் இணைத்துவிட்டார். இதில் ஆழ்வார் பெருமானின் பக்திப்பெருக்கு அதன் உயர்வு அனந்தத்தை எட்டிவிட்டது. இங்குப் பெரியாழ்வார் காட்டும் அசோதைப் பிராட்டியின் உள்ளம் பாரதத்தாயின் உள்ளமாகும்.

குழந்தைகளின் தாலாட்டுப் பருவத்தில் உற்றார், உறவினர், மாமன்மார், அத்தைமார், தாய்வழி உறவினர், தந்தைவழி உறவினர், நண்பர்கள், வேண்டியவர்கள் பரிசுப் பொருள்கள் கொண்டுவந்து கொடுப்பது நமது நாட்டுப் பண்பாடும் பாரம்பரியப் பழக்கமுமாகும். இங்கு கண்னனுக்கு யார்யார் என்னென்ன பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள் என்று பாருங்கள். -

பிரம்மா - படைப்புக் கடவுள் - தொட்டில் கொண்டு வந்து கொடுக்கிறார். “மாணிக்கக்கட்டி, வயிரமிடைக் கட்டி, ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில் பேனியுனக்குப் பிரமன் விடு தந்தான்” என்று பெரியாழ்வார் பாடுகிறார். மாணிக்கம், வயிரம், ஆணிப்