பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18O சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

வளர்ச்சியையும் கண்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அதைக் குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து கூடி மகிழ்ந்து கொண்டாடுகிறோம். அது குடும்பத்தின் விழாவைப்போலச் சிறப்பாக நடைபெறுகிறது. இன்றுங்கூட கேரளம் முதலிய பகுதிகளில் குழந்தைகள் பாலுண்ணும் பருவத்திற்கடுத்து சோறுண்னத் தொடங்கும் நிகழ்ச்சியைக் குடும்ப விழாவாக நடத்துகிறார்கள். உற்றாரைச் சுற்றத்தாரை அழைத்து அவ்விழாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்.

கண்ணனுக்குக் க்ாது குத்துதல், நீராட்டுதல் குழல் வாருதல், காப்பிடல் போன்ற நிகழ்ச்சிகளுடன் ஊராரை அழைத்துச் சிறப்புச் செய்தல்பற்றி ஆழ்வார் அழகாகப் பாடுகிறார். குழந்தைகளுக்குக் காதணி விழா நடத்துவது, கோவிலுக்குச் சென்று மொட்டையடிப்பது, பெண் குழந்தை களுக்குத் தாவணி போடுவது, பூப்பெய்தபோது நீராட்டுவிழா நடத்துவது முதலிய குடும்ப விழாக்கள் நமது நாட்டு மக்களின் சீரிய பண்பாட்டு மரபாகும்.

குழந்தைகளுக்கு நடத்தும் விழாக்களை ஆழ்வார்கள் கண்ணனோடு திருமால் வழிபாட்டோடு இணைத்து மிகவும் அழகாக விரிவாக நிலைநாட்டியுள்ளார்கள். திருப்பாவைத் திருவிழா

ஆண்டாள், ஆழ்வார்களுள் பெண்பாற்புலவர். தனிச் சிறப்புமிக்கவர். பட்டர் பிரான் - விட்டுனுசித்தர் - பெரியாழ்வார் வளர்த்த கோதை நாச்சியார் ஆண்டாளாகி, திருவரங்கநாதனுடன் இரண்டறக் கலந்து, தனிக் கோயில் கொண்டவர்.

ஆழ்வார்களுள் வேறு யாருக்கும் தனிச் சிறப்புமிக்க தனிக் கோயில்கள் இல்லை. திருமால் திருக்கோயில்களில் அவர்களுக்குத் தனிச் சந்நிதிகள் உள்ளன. ஆண்டாளுக்கும் அநேகமாகப் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் தனிச் சந்நிதிகள் இருப்பதையும் காண்கிறோம்.

ஆண்டாள் கோயில் திருவில்லிபுத்துாரில் வடபத்ரசாயி கோயிலுக்கு அருகிலேயே தனியாக அமைந்திருக்கிறது.