பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அழைக்கிறாள்; நாட்டில் உள்ள அனைவரையும் உலகில் உள்ள அனைவரையும் அழைக்கிறாள். துரங்குபவர்களை எழுப்புகிறாள். நீராடி உடலையும் உள்ளத்தையும் சுத்தம் செய்துகொண்டு, உடம்பை அலங்கரித்துக்கொண்டு பூச்சூடி வருமாறு பாவையர் அனைவரையும் அழைக்கிறார். எல்லோரும் சேர்ந்து கண்ணனைப் பாடுவோம், கண்னன் புகழைப் பாடுவோம் என்று எல்லோரையும் அழைக்கிறாள். "மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்” என்று பாவையரை அழைக்கிறாள்.

“வையத்து வாழ்விர்காள் ! நாமும்,நம் பாவைக்குச் செய்யும் கிரிசைகள் கேளிரோ" என உலகில் உள்ள அனைவரையும் அழைத்து, "பாற்கடலுள் பையத் துயின்ற பரம னடிபாடி, நெய்யுண்னோம் பாலுண்னோம், நாட்காலே நீராடி, மையிட் டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம், செய்யாதன செய்யோம், திக்குறளைச் சென்றோதோம்” என்றெல்லாம் கூறி, கூவியழைத்து கூட்டாகவே நோன்பிருந்து அனைவரும் உய்யுமாறு பாடுவோம் என்று பன்மையில் பாடுகிறார்.

"ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி, நாங்கள் நம் பாவை க் குச் சாற்றி நீராடினால், திங் கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து, ... நீங்காத செல்வம் நிறைந்தேலோ' என்று, நாடெல்லாம் செழிக்க, நாட்டு மக்கள் எல்லாம் அனைத்துச் செல்வங்களும் பெறப் பன்மையில் பாடுகிறார்.

துங்குபவர்களை எழுப்பப் பாடுகிறார். பறவைகள் எழுந்து பாடத் தொடங்கிவிட்டன. வெள்ளை விளிசங்கின் ஒலி கேட்கிறது. "பிள்ளாய் எழுந்திராய் r என்று கூவி அனைவரையும் எழுப்புகிறார். "கீசுகீசென்று எங்கும் ஆனைச் சாத் தன் கலந்து பேசின. பேச்சர வம் கேட்டிலையோ? காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஒசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ என்றும், கீழ்வானம்