பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

சிதையாதிருக்கும்படி கண்ணனை அவர்கள் வேண்டுவதைக் கோதை நாச்சியார் தமது திருமொழிப் பாடல்களில் குறிப்பிடுகிறார்.

"சீதைவா யமுதுண்டாய் ! எங்கள்

சிற்றில்நீ சிதையேல்" என்று வீதி வாய்விளை யாடு மாயர்

சிறுமியர் மழலைச் சொல்லை வேத வாய்த்தொழி லார்கள் வாழ்வில்லி புத்துார் மன்விட்டு. சித்தன்தன் கோதை வாய்த்தமிழ் வல்ல வர்குறை

வின்றி வைகுந்தம் சேர்வரே !” என்று கோதை நாச்சியார் தமது திருமொழி நாமமாயிரம் பாடல்கள் பத்தின் கடைசியில் குறிப்பிடுகிறார்.

இதில் திருமால் வழிபாட்டை எவ்வாறு சிறுவர் சிறுமியரின் சிற்றில் விளையாட்டு நிகழ்ச்சியுடன் இணைத்து அத்தனை அற்புதமாகப் பாடியிருப்பதைக் காண்கிறோம்.

ஆயர்பாடிக் கன்னியர்களுடன் கண்ணன் விளையாடி யதைப் பாடல்களில் இசைத்துக் கோதை பாடுகிறாள். திருமால் வழிபாட்டை வாழ்க்கையோடு இணைத்துப் பாடுவது ஆழ்வார்களின் மரபாகும். அதில் ஊடல், கூடல், உணர்தல், புணர்தல் முதலிய இன்பச்சுவைகளை அழகியலுடன் மிக நுட்பமாக இணைத்துத் திருமால் வழிபாட்டை ஆழ்வார்களும் - குறிப்பாக ஆண்டாளும் - வெளிப்படுத்துவது தனிச் சிறப்பாகும்.

காதல் நிகழ்ச்சிகளில் காதலி காதலனுக்கும், காதலன் காதலிக்கும் சிறப்பான பறவைகளைத் துரது அனுப்புவது என்பது நம்து சிறந்த இலக்கிய மரபாகும். கிளியும் குயிலும், அன்னமும் புறாவும் மற்றச் சில பறவைகளும் காதல் துதுக்குரியவை. காற்றும் மேகமும் காதல் தூது செல்வதும் இலக்கிய மரபேயாகும். தெய்விகக் காதலுக்கும் இவை பொருந்துவனவாக உள்ளன. இங்கு ஆண்டாள் திருமாலிடம் குயிலைத் துாது அனுப்புவதாக வரும் பாடல்கள் சிறப்பு மிகுந்தவையாகும்.