பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

திருமால் வழிபாட்டை இணைத்துப் பாடியிருப்பதைக் காண்கிறோம். இந்த அற்புதமான பாடல்கள் நாம் திரும்பத் திரும்பப் பாடிப் பாடி இன்புறத்தக்கவையாகும். இத்தகைய அபூர்வமான பாடல் தொகுதியை வேறு எந்த நாட்டு

இலக்கியத்திலும் காணமுடியாது. அது பாரத நாட்டிற்கும் தமிழ்நாட்டிற்கும் உள்ள தனிச் சிறப்பாகும்.

"வாரண மாயிரம் சூழ வலம்செய்து

நாரண நம்பி நடக்கின்றான் என்றுஎதிர் பூரண பொற்குடம் வைத்துப் புரமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்"

"நாளை வதுவை மனமென்று நாளிட்டு

பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான்ஒர் காளை புகுதக் கனாக்கண்டேன் தோழிநான்"

"இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம்எல்லாம், வந்திருந்து என்னை மகட்பேசி மந்திரித்து, மந்திரக் கோடி யுடுத்தி மனமாலை அந்தரி சூட்டக் கனாக்கண்டேன் தோழிநான்"

"நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனிநல்கிப், பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்திப் பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னைக் காப்புநாண் கட்டக் கனாக்கண்டேன் தோழிநான்"

"கதிராளி தீபம் கலச முடனேந்தி

சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன், அடிநிலை தொட்டுஎங்கும் அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழிநான்"

"மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றுத,

முத்துடைத் தாம நிறைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழிநான்"

"வாய்நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்

பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து காய்சின மாகளி றன்னான்என் கைப்பற்றித் தீவலம் செய்யக் கனாக்கண்டேன் தோழிநான்"