பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 187

"இம்மைக்கும். ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்

நம்மை யுடையவன் நாரா யணன்நம்பி செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழிநான்” “வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு

எரிமுகம் பாரித்துஎன்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்துப் பொரிமுகம் தட்டக் கனாக்கண்டேன் தோழிநான்" "குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

மங்கல வீதி வலம்செய்து மணநீர் அங்கவ னோடும் உடன்சென்றங் கானைமேல் மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழிநான்" என்றெல்லாம், தாம் கண்ட கனாவின் விவரத்தைத் தம் தோழியிடம் கூறிய கோதையின் பாடல்கள் திருமால் வழிபாட்டின் உச்சமாகும். ஆண்டாளின் இப்பாடல்கள் தலைசிறந்த, இனையில்லாத பக்தி இலக்கியமாகும். இந்தப் பாடல்களை வாய் நிறையப் பாடும்போது அவற்றிற்குச் சிறந்த பயன்பாடுகள் இருப்பதையும் ஆண்டாள் கூறுகிறார். இந்தத் துய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் “வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே” என்று குறிப்பிடுகிறார்.

திருமணத்தின் பயன்பாடு சிறந்த இல்லறம் இல்லறம் அல்லது நல்லறமன்று என்பது தமிழ்வாக்கு. வள்ளுவப் பெருமான் இல்லறத்தைப்பற்றி மிக நுட்பமாகப் பல கருத்துகளையும் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளதை உலகம் அறியும். -

“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்” என்று இல்லறத்தின் சிறப்பைத் தெய்விகத் தன்மைக்கு உயர்த்துகிறார், வள்ளுவப் பேராசான்.

சிறந்த இல்லறத்தின் பயன்பாடு, செல்வமும் அறிவும் மிக்க, சிறந்த செயல் திறனும் பக்தியும் மிக்க அச்சிறந்த செயல்பாடுகளில் ஈடுபாடும் ஞானமும் மிக்க நன்மக்களைப் பெற்று உலகிற்கு அளிப்பதாகும். இத்தகைய சீரிய சமுதாயக் கருத்துகளைச் சமுதாய விழாக்களுடனும் திருமால்