பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்றுவாய் 17

நின்றவள், பத்தினியாக நின்று அரசியல் பிழைத்தோருக்குக் கற்றாகி, அறத்தின் சின்னமாகி, பத்தினித் தெய்வமாகி வானில் செல்வதைச் சிறப்பான காட்சியாகக் காப்பியத்தில் காண்கிறோம். சமணத்தின் முக்கிய கருத்தாக ஊழ் வினையைப் பற்றியும், முன்பிறப்புகள் பற்றியும் பல கதைகளையும் கதைக் கூறுகளையும் காப்பியத்தில் காண்கிறோம்.

சமண சமயத்தில் திளைத்த இளங்கோவடிகள், இதர மயக் கருத்துகளுடன் சமரசம் செய்துகொள்வதாகப் /லப்படாவிட்டாலும், அவர் தமது காப்பியத்தில் அக்காலத்தில் மக்களிடத்தில் பழக்கத்தில் இருந்துவந்த பல வேறு வழிபாடுகளையும், வழிபாட்டு முறைகளையும்பற்றி மிகவும் விரிவாகவே குறிப்பிடுகிறார். திருமால், இறைவன், முருகன், சக்தி, இறைவி, திருமகள், பலராமன், இந்திரன், பல பிற தெய்வங்கள், மற்றும் பல வகைப் பூதங்கள் பற்றியெல்லாம் இளங்கோவடிகளார் மிகவும் சிறப்பாகவே குறிப்பிடுகிறார். அவை தொடர்பான மக்களையும் பாட்டியும் வாழ்த்தியும் பாடுகிறார். அத்துடன் தெய்வம் தெளிமின் என்று அறிவுரை கூறுகிறார்.

இந்திர விழா, மங்கல வாழ்த்து, கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, குன்றக்குரவை முதலிய விழாக் களையும், வரிப்பாடல்களையும், குரவைப் பாடல்களையும், மக்களிடையில் பழக்கத்தில் இருந்த பலவகைக் ததுகளையும் தெய்வக் கூத்துகளையும்பற்றியெல்லாம் காப்பியத்தில் படித்து மகிழ்கிறோம்.

இவைகளுள் தனிச்சிறப்பு மிக்கனவாகத் திருமால் கோயில்களையும், பலராமன் கோயில்களையும் மற்றும் திருவாங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவனந்தபுரம் முதலிய கோயில்களில் எழுந்தருளியுள்ள திருமாலின் பெருமைகளையும் பல வேறு பாத்திரங்களின் வாயிலாகக் கேட்டு மகிழ் கிறோம். ஆய்ச்சியர் கு, வையென்னும் ஆயர்பாடி அனங்குகள் வேடம் கட்டி 2, ப்பாடும் கூத்துப் பாடல்கள் மூலம், திவ்யப்பிரபந்தப் ல்களுக்கு ஈடாகத் திருமால் பெருமைகளை, திருமாலின்