பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 189

ஒவ்வோர் ஆழ்வாரின் பாடல்களும் தனித் தன்மைகளும் தனிச் சிறப்புகளும் கொண்டவைகளாகும். அந்த வகையில் தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருமாலைப் பாடல்களும் திருப்பள்ளியெழுச்சிப் பாடல்களும் தனிச் சிறப்பு மிக்கவைகளாகும். இவ்விரண்டு பாடல் தொகுதிகளும் அரங்கனைப்பற்றியனவாகும். அப்பாடல்கள் திருமால் திருக்கோயில்கள் அனைத்திலும் பாடப்படுபவைகளாகும். திருமாலைப் பாடல்கள் நாற்பதையும் பாடினால் நாலாயிரம் பாடல்களையும் பாடின பயன்பாடு கிடைக்கும் என்பது திருமால் அடியார்களின் நம்பிக்கையாகும். இப்பாடல்கள் சுவை மிக்கவை, உள்ளத்தை உருக்குபவை.

"பச்சைமா மலைபோல் மேனிப்

பவளவாய்க் கமலச் செங்கண், அச்சுதா, அமர ரேறே !

ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,

அரங்கமா நகரு ளானே" என்றும்,

"வேதநூல் பிராயம் நூறு

மணிசர்தாம் புகுவ ரேனும், பாதியும் உறங்கிப் போகும்,

நின்றதில் பதினை யாண்டு பேதைபா லகன தாகும்,

பிணி,பசி, மூப்புத் துை ஆதலால் பிறவி வேண்டேன்

அரங்கமா நகரு ளானே'

என்றும் உள்ளம் உருகிப் பாடுகிறார்.

'சூதனாய்க் கள்வ னாகித்

தூர்த்தரோ டிசைந்த காலம் மாதரார் கயற்க னென்னும்

வலையுள்பட் டழுந்து வேனை