பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 191

நூமர்களைப் பழிப்ப ராகில்

நொடிப்பதோ ரளவில் ஆங்கே

அவர்கள்தாம் புலையர் போலும்

அரங்கமா நகரு ளானே!"

என்றும் திருமாலடியார் குலமனைத்தையும் ஒரு குலமாகக் ...ண்டு அருமையாகப் பாடுகிறார்.

இவ்வாறு தொண்டரடிப்பொடியாழ்வார், சாதிக் கட்டமைப்பின் ஏற்றதாழ்வுகளையும் பாகுபாடுகளையும் எடுத்துக் கூறும் போலிச் சாத்திரங்களைத் தகர்த்தெறிகிறார். தொண்டரடிப்பொடியாழ்வாரின் திருப்பள்ளி யெழுச்சிப்பாடல் அறிதுயிலில் ஆழ்ந்துள்ள அரங்கனை - பள்ளிகொண்ட பெருமாளை எழுப்பி உலகை ஆட்கொள்வதற்கான வேண்டுகோளாகும். இப்பாடல்கள் ல்லாப் பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படுகின்றன. ■

"கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தடைந்தான்,

கனைவிரு ளகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம்

வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும்

அரங்கத்தம் மா!பள்ளி யெழுந்தரு ளாயே" என்று ஆழ்வார் தமது திருப்பள்ளி யெழுச்சிப் பாடலைத் தொடங்குகிறார்.

கதிரவன் உதிக்கும்போது, உலகில் ஏற்படும் அற்புதமான மாற்றங்கள், இயற்கைச் சக்திகள் அனைத்திலும் ஏற்படும் பேரெழுச்சி, மக்கள் கூட்டத்தின் அசைவுகள், செயல்பாட்டு ஒட்டங்கள், மற்றும் ஆலயங்களில் தொடங்கும் முரசொலி இவையெல்லாம் அலை கடலொலியென எங்கும் எழுச்சி ஏற்படுவதுபற்றியெல்லாம் ஆழ்வார் மிகவும் அருமையாகத் தமது பாடல்களில் எடுத்துக் கூறுகிறார். இங்கும் திரள் திரளாக மக்கள் கூட்டம் பக்தி இயக்கத்தில் சேர்வதை ஆழ்வார் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.