பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

இன்னும் "சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்" என்றும், "தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி" என்றும் "பாயிரு ளகன்றது" என்றும், "அம்பர தலத்தில் நின்ற கல்கின்ற திருள்போய்” என்றும், ஒளி பரவி இருள் அகலுவதையும் அதனால் உயிரினங்களில் ஏற்படும் எழுச்சிபற்றியும் ஆழ்வார் மிக அற்புதமாக எடுத்துக் கூறுகிறார். ■

கடைசியாக,

"கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன. இவையோ?

கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ? துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்

துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா தொடையொத்த துளவமும் கூடையும் பொலிந்து

தோன்றிய தோள்தொண்ட ரடிப்பொடி யென்னும் அடியனை அளியனென் றருளியுன் அடியார்க்கு

ஆட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே" என்று ஆழ்வார் தமது திருமால் வழிபாட்டை திருப்பள்ளியெழுச்சிப் பாடலில் நிறைவு செய்கிறார். திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார், திருமாலைப்பற்றிப் பண் இசைத்துப் பாடுவதில் சிறப்பு மிக்கவர். அவர் பாடியுள்ள அமலாதிபிரான் பாடல்கள் திருமால் அடியார்களுக் கிடையிலும் பக்தர்களுக்கிடையிலும் மிகுந்த புகழ் பெற்றவை; விரும்பிப் பாடப்படுபவை. திருமலை நம்பிகள் திருப்பாணாழ்வாரின் "அமலனாதிபிரான்” பாடல்களைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். அவருடைய தனியனில்,

“காட்டவே கண்ட பாத

கமலம்நல் லாடை உந்தி தேட்டரும் உதர பந்தம்

திருமார்பு கண்டம் செவ்வாப் வாட்டமில் கண்கள் மேனி

முனியேறித் தனிப்பு குந்து பாட்டினால் கண்டு வாழும்

பாணர்தாள் பரவி னோமே"

என்று பாடியுள்ளார்.