பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 193

"அமல னாதிபிரான் அடியார்க்

கென்னை ஆட்படுத்த விமலன், விண்ணவர் கோன்விரை

யார்பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி வானவன்

நீள்மதி ளரங்கத் தம்மான் திருக் கமல பாதம் வந்தென் கண்ணின்

உள்ளன. வொக்கின்றதே!” என்று தொடங்கி, அரங்கனின் சிவந்த ஆடைமீது எனது ந்ெதனை சென்றது என்றும், அயனைப் படைத்த உந்தி அ யேனுடைய உள்ளத்தின்னுயிர் என்றும், அரங்கனுடைய திருவயிறு எனது உள்ளத்தில் உலவுகிறது என்றும், அவனுடைய திருவார மார்பு அடியேனை ஆட்கொண்டது என்றும், உலகை உண்ட அவனுடைய கண்டம் என்னை ய்வித்தது என்றும், அவனுடைய பவழச் செவ்வாய் எனது ந்ெதையைக் கவர்ந்தது என்றும், அவனுடைய கண்கள் . பன்னையே மய 1க்கினவென்றும், அவனது நீல மேனி எனது நெஞ்சினை நிறைத்தது என்றும் பாடி,

"கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என்னுள்ளம் கவர்ந்தானை, அண்டர் கோன்அணி அரங்கன்என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் கானாவே' என்று தமது அற்புதமான திருமால் வழிபாட்டுத் திவ்யப் பாசுரங்களைப் பாடி முடிக்கிறார்.

வைணவ மரபில் அடியார்களுக்கும் தொண்டர் களுக்கும் மிகுந்த மரியாதையுண்டு. அதனால்தான் விப்பிர நாராயணர் தமது பெயரையே தொண்டரடிப்பொடி என்று மாற்றிக்கொண்டார். வைணவ குலத்தில் ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், ஜீயர்கள் ஆகியோரும் அவர்களுடைய சேவைகளும் பாராட்டப்படுகின்றனர். அவர்களுக்கு நாம் செய்யும் சேவை திருமாலுக்கு நாம் செய்யும் சேவைக்கு ஈடாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் மதுரகவி யாழ்வாரின் பாடல்கள் நம்மாழ்வாரின் பெருமைகளை எடுத்துக்கூறும் பாடல்களாகவே அமைந்துள்ளன.