பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

"வேறொன்றும் நானறியேன், வேதம் தமிழ்செய்த

மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறுஎங்கள் வாழ்வாம்என் றேத்தும் மதுரகவி யார்எம்மை ஆள்வார் அவரே யரண்”

என்று நாதமுனிகள் தமது வெண்பாவில் குறிப்பிடுகிறார்.

மதுரகவியாழ்வார், "கண்ணி நுண்சிறு தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயன், என்னப்பனில், நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால், அண்ணிக்கும் அமுதுாறு மென் நாவுக்கே" என்று தொடங்கி நம்மாழ்வார் நம்பியைப் புகழ்ந்து போற்றி, ‘அன்பன் தன்னை யடைந்தவர் கட்கெல்லாம் அன்பன் தென்குரு கூர்நகர் நம்பிக்கு அன்பனாய் மதுரகவி சொன்ன சொல் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே" என்று தமது வழிபாட்டை முடிக்கிறார். பெரிய திருமொழி

திருமங்கையாழ்வார் பாடியுள்ள பெரிய திருமொழிப்

பாடல்கள் வேதாந்தத்தின் சாரமாகும். ஆழ்வார்களுள் திருமங்கையாழ்வார் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அவர் பாடியுள்ள பாடல்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டனவாகும். அவர் தமது பாடல்கள்மூலம் உலகின் அஞ்ஞானத்தை அகற்றுகிறார் என்பது ஐதீகம். அவர் தமது சொந்த அனுபவத்தின்மூலம் நாராயண மந்திரத்தின் மகிமையை, பெருமையை உணர்ந்து ஏற்றுத் திருமால் வழிபாட்டில் தீவிரமாக ஈடுபடுகிறார். அவருடைய பாடல்கள் எளிய இனிய தமிழில் நம்மைக் கவர்கின்றன. நாராயண மந்திரத்தின் மெய்ப்பொருளைப் பற்றிய அவருடைய பாடல்கள் மிகச் சிறப்புமிக்கவை.

"வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்

பெருந்துயர் இடும்பையிற் பிறந்து கூடினேன் கூடி இளையவர் தம்மோடு

அவர்தரும் கலவியே கருதி