பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

(கீழச்சாலை), திருவண் புருடோத்தமம், செம்பொன் செய்கோவில் (செம்பொன்னரங்கர் கோவில்), திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன் பள்ளி, திருவந்தளுர் (திருவழுந்துார்), திருவெள்ளியங்குடி, திருப்புள்ளம் பூதங்குடி, திருக்கூடலூர், திருவெள்ளறை, திருவரங்கம், திருப்பேர்நகர், திருநந்திபுரவிண்ணகரம் (நாதன் கோவில்), திருவிண்னகர் (உப்பிலியப்பன் கோவில்), திருநறையூர் (நாச்சியர் கோவில்), திருச்சேறை, திருவழுந்துார், திருச்சிறு புலியூர், திருக்கண்னமங்கை, திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருநாகை (நாகபட்டினம்), திருப்புல்லானி (தர்ப்பசயனம்), திருக்குறுங்குடி, திருவல்லவாழ் (திருவல்லா), திருமாலிருஞ் சோலை (அழகர் கோவில்), திருக்கோட்டியூர் முதலிய பல திவ்ய தேசங்களிலும் எழுந்தருளியுள்ள திருமாலைப் பல அவதார வடிவங்களிலும் புகழ்ந்து பாராட்டி மங்களசாசனம் செய்து வழிபட்டுள்ளார். அவருடைய திருமால் வழிபாட்டு முறை அனைவருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

பெரியாழ்வாரைப் போலவே திருமங்கையாழ்வாரும் கண்ணனைக் குழந்தையாகவும் தன்னைக் கண்னனின் தாயாகவும் கற்பித்துத் தாய்ப்பால் உண்ண வரும்படி அழைத்துப் பாடுகிறார், கை கொட்டி விளையாடும்படி அழைத்துப் பாடுகிறார்.

"சந்த மலர்க்குழல் தாழத்

தானுகந் தோடித் தனியே வந்துஎன் முலைத்தடந் தன்னை வாங்கிநின் வாயில் மடுத்து நந்தன் பெறப்பெற்ற நம்பீ

நானுகந் துண்னும் அமுதே எந்தை பெருமானே ! உண்ணாய்

என்னம்மம் சேமமுண் ணாயே”

என்று மெய்மறந்து பாடி மகிழ்கிறார்.

ஆழ்வார் தம்மை நாயகியாகக் கற்பித்துப் பகவான் தம்மிடம் வந்து சேருமாறு பறவைகளைத் துாது