பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 197

அனுப்புவதாகப் பாடும் பாடல்கள், நமது வழிபாட்டு முறைகளுள் ஒன்றாகும்.

"திருத்தாய் செம்போத்தே

திருமா மகள்தன் கணவன் மருத்தார் தொல்புகழ் மாதவனைவரத் திருத்தாய் செம்போத்தே!" "கரையாப் காக்கைப் பிள்ளாய்

கருமா முகில்போல் நிறத்தன் உரையார் தொல்புகழ் உத்தமனைவரக்

கரையாப் காக்கைப் பிள்ளாய்” "கூவாய் பூங்குயிலே,

குளிர்மாரித் தடுத்துகந்த மாவாய்க் கீண்ட மணிவண்ணனைவரக்

கூவாய் பூங்குயிலே" . .ன்றெல்லாம் பாடுகிறார்.

ஆழ்வார் தம்மைப் பிராட்டியாகக் கற்பித்துக் கொண்டு, தென்றல் வந்து தீ வீசுவதாகவும், வாடைக் காற்று தம்மை வந்து வாட்டுவதாகவும், திங்கள் வெங்கதிர் (நிலவொளி) தம்மீது வந்து சீறுவதாகவும், பொங்கு மாகடல் ஒலி தம்மைத் துன்புறுத்துவதாகவும், மன்மதன் தம்மீது கனைகளை ஏவுகிறான் என்றும், தம்மைக் காக்க வரும்படி திருமாலை வேண்டிப் பாடுகிறார். இன்பச் சுவையுடன் ருெங்கார ரசத்துடன் ஆண்டவனை வழிபடும் முறையில்

ஆழ்வார் மிகவும் சிறப்பாகப் பாடுகிறார்.

திருமாலின் அவதாரப் பெருமைகளை மீனாக, ஆமையாக, வராகமாக, நரசிம்மமாக, குறளாக (வாமனன்), ப. சுராமனாக, இராமனாக, அன்னமாக, கண்னனாக அவதரித்து உலகைக் காத்ததை ஆழ்வார் பாராட்டி வழிபடுகிறார்.

"முன்னுல கங்கள்ஏழும் இருள்மண்டி யுண்ண

முதலோடு வீடுமறி யாது என்னிது வந்ததென்ன இமையோர் திகைப்ப

எழில்வேத மின்றி மறைய