பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 201

அவர் படியுள்ள அந்தாதி மூன்றாம் திருவந்தாதி என்று | வயியத் திவ்யப்பிரபந்தப் பாசுரத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

பேயாழ்வார் திருமாலை வழிபட்டுத் "திருக்கண்டேன், பென்மேனி கண்டேன், அருக்கன் அணிநிறமும் கண்டேன். செருக்கிளரும் பொன்னாழி கண்டேன். புரிசங்கம் கண்டேன். ஆழி வண்ணன்பால் இவையெல்லாம் கண்டேன்” என்று தெ க்கித் திருமால்தான் மருந்தும் பொருளும் அமுதமும் என்றும், வலம்புரிந்த வான் சங்கம் கொண்டானை ஒதினால், தேகம் திறலும் திருவும் உருவமும், மாசில்லாத குடிப்பிறப்பும் பற்ற நலன்கள் அனைத்தும் கிடைக்கும் என்றும் பாடுகிறார். இம்மூன்று ஆழ்வார்களும் திருமால் பெருமைகளையும் திருமால் உறையும் திருப்பதிகளைக் குறித்தும் திருமாலின் அருஞ்செயல்களை வியந்து பாராட்டியும் பாடியுள்ளார்கள். திருமழிசையாழ்வார் சென்னைக்கருகில், உடையவர் அவதரித்த திருப்பெரும்புதுாருக்குச் சமீபமாக உள்ள திருமழிசை யென்னும் ஊரில் பிறந்தவர். இவர் சுதர்சன் சக்கயத்தின் அமிசம் என்பது ஐதீகம்.

இவ்வாழ்வார், ஆழியானே அனைத்தும் என்றும், ஆழியானே ஆதியும் அந்தமும் ஆனவன், பொருள் முடிவும், அருள் முடிவும் ஆனவன் என்றும், திருமாலை நினைத்து நீயே உலகெலாம், நின்னருளே நிற்பன, நீயே தவத்தேவ தேவனும், நீயே எரிசுடரும் மால்வரையும், எண்டிசையும் அண்டத் திருச்சுடரும் என்றும், வானுலவு, தீவளி, மாகடல், மாபொருப்பு, வெங்கதிர், தண்மதி, கொண்டல் பெயரும் திசைகள் எட்டும், சூழ்ச்சியும், ஆறு சமயம் அனைத்தும் திருமாலே என்றும், பாட்டும் முறையும், படுகதையும், பல்பொருளும், ஈட்டிய தீயும் இருவிசும்பும், கேட்ட மனுவும், கருதியும், மறை நான்கும் அனைத்திற்கும் தலைவன் என்றும் படுகிறார்.

ஆழ்வார்கள் அனைவருமே இல்லறத்தையே சிறப்பித்துக் கூறுகிறார்கள் துறவறத்தை வற்புறுத்தவில்லை.