பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

அது வைணவத்தின் தனிச்சிறப்புகளுள் ஒன்றாகும் திருமாலைப் பாடும் ஆழ்வார்கள் திருமகளையும் உயர்த்திப் பாடுகிறார்கள் என்பதைக் காண்கிறோம்.

"இல்லறம் இல்லேல் துறவறம் இல்என்னும்

சொல்லற மல்லனவும் சொல்லல்ல - நல்லறம் ஆவனவும் நால்வேத மாத்தவமும் நாரணனே யாவதி தன்றென்பா ரார்?" இல்லறத்திற்கும் துறவறத்திற்கும் மேலான நல்லறமும் வேதமும் தவமும் நாராயணனே என்று திருமழிசைப்பிரான் கூறுகிறார். நம்மாழ்வார்

ஆழ்வார்களுள் நம்மாழ்வார் தனிச்சிறப்பும் தனித்தன்மையும் கொண்டவர். இவர் ஆழ்வார் நிலையும் ஆச்சாரியார் நிலையும் இணைந்து நிற்பவர். இவருடைய பாடல்கள் வேதங்களின் சாரம் கொண்டவை. நம்மாழ்வார் மொத்தம் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணுாற்று ஆறு பாடல்கள் பாடியுள்ளார். அவை முறையே, திருவிருத்தம் நூறு பாசுரங்களும், திருவாசிரியம் ஏழு பாசுரங்களும், பெரிய திருவந்தாதி எண்பத்து ஏழு பாசுரங்களும், திருவாய்மொழி ஆயிரத்து நூற்றிரண்டு பாசுரங்களும் கொண்டவை என்று நாலாயிரத் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுத்த அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள். நம்மாழ்வாரின் பாசுரங்கள் தமிழ் வேதம் என்று கருதப்படுகிறது. அவர் பாடியுள்ள திருவாய்மொழி ஒரு தனிப்பேரிலக்கியமாகும் பக்தி நிலையும், பிரபத்தி நிலையும் தத்துவ நிலையும் இணைந்ததாகும். நம்மாழ்வாரின் பாடல்களில் சமய நல்லிணக்க கருத்துகளும், திருமால் வழிபாடும் இணைந்து உச்சநிலை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது.

நம்மாழ்வாரின் திருமால் வழிபாடு தனிச்சிறப்புக் கொண்டதாகும். அவர் தமது திருவிருத்தத்தில் எம்பெருமான்மீதுள்ள அன்பை எடுத்துக் கூறித் தமது முறையீட்டை ஒரு விண்ணப்பமாகவே குறிப்பிடுகிறார்.