பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 2O3

'பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா

வொழுக்கும் அழுக்குடம்பும் இந்நின்ற நீர்மை இனியா

முறாமை, உயிரளிப்பான் எந்நின்ற யோனியு மாயப்ப்பிறந்

தாயிமை யோர்தலைவா மெய்ந்நின்று கேட்டரு ளாய்,அடி

யேன்செய்யும் விண்ணப்பமே” இந்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து தம்மைத் தலைவியாகப் பாவித்து எம்பெருமானாரைத் தலைவராகக் கருதி உள்ளமுருகப் பாடுகிறார். பெண்மையின் அகப் பொருளை விளக்கும் அருமையான பாடல்களாக அவை அமைந்திருக்கின்றன. தலைவனின் பெருமைகளைத் தலைவி வடுத்துக் கூறும் தலைசிறந்த பாடல்களாக இப்பாசுரங்கள்

அமைந்துள்ளன.

"நிறமுயர் கோலமும் பேரும்

உருவும் இவையிவையென்று அறமுயல் ஞானச் சமயிகள்

பேசிலும் அங்கங்கெல்லாம் உறவுயர் ஞானச் சுடர்விளக்

காப்நின்ற தன்றியொன்றும் பெறமுயன் றாரில்லை யால்எம்பி

ரான்றன் பெருமையையே”

என்று தலைவனது பெருமையைத் தலைவி கூறுகிறாள்.

ஆழ்வாரின் இந்த உள்ளம் கனிவான பாசுரங்களின் பயனை, இந்த நுட்பமான விண்ணப்பத்தின் பயனைக் ப, )/வத க, m

"நல்லார் நவில்குரு கூர்நக

ரான்திரு மால்திருப்பேர்

வல்லார் அடிக்கண்ணி சூடிய

மாறன்விண் ணப்பஞ்செய்த

சொல்லார் தொடையல் இந்நூறும்வல்

லார்அழுந் தார்பிறப்பாம்

பொல்லா அருவினை, மாயவன்

சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே"

என்னும் நிறைவான பாசுரம் அமைந்துள்ளது.