பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

நம்மாழ்வார் தமது திருவாசிரியப் பாசுரத்தில் திருமாலே மாபெரும் தெய்வம் என்று கூறி வழிபடுகிறார்.

"நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா யாவகை யுலகமும் யாவரும் அகப்பட நிலநீர் தீகால் சுடர்.இரு விசும்பும் மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும் அகப்படக் கரந்துஓர் ஆலைச் சேர்ந்தவெம் பெருமா மாயனை யல்லது ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே?” என்று பாடுகிறார்.

ஒரு தடவை காளமேகப்புலவர் நாகபட்டினத்தில் தெருவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். மத்தியான நேரமாகிவிட்டது. கடுமையான பசியும் வந்துவிட்டது. அருகில் ஒரு பெருமாள் கோவில். கோவிலுக்குள் சென்று பெருமாளிடம் புளியோதரைப் பிரசாதம் கேட்டுப் பெற்றுப் பசியாறலாம் என்று கருதிப் பெருமாளிடம் விண்ணப்பித்தாராம். அக்காலத்தில் காளமேகப்புலவர் சிவ பக்தர். சிவனைப்பற்றித்தான் கவி பாடுவார். எனவே, பெருமாள் தோன்றித் தம்மைப் பற்றிப் பாடும்படி கேட்டாராம். கடும்பசி காரணமாகக் காளமேகப்புலவரும் அதற்கிசைந்து, "பெருமாளே நீயதிகம்” என்று பாடினாராம். பிரசாதம் கிடைத்தது. நன்றாகச் சாப்பிட்டுப் பசியாறினார் புலவர். அதன் பின்னர் பெருமாளைப் பார்த்து, "உன்னிலும் நான் அதிகம்” என்று கூறினாராம். "அதெப்படி?” என்று பெருமாள் கேட்க, "சிவனுக்கு ஒர் பிறப்பு, உன் பிறப்போ பத்து, என் பிறப்போ எண்ணிலடங்காது. எனவே, நான்தான் பெரியவன்” என்று விளக்கம் கூறியதாக ஒரு கதை உண்டு.

அது போல, நம்மாழ்வார், பகவான் தமது உள்ளத்தில் அடக்கம், அந்த உலகப்பெரியவர் தமது உள்ளத்தில் அடக்கமாதலால் அந்தப் பகவானைவிடத் தாமே பெரியவர் என்று இப்பாசுரங்களைப் பாடினார். அப்பாசுரங்கள் பெரிய திருவந்தாதி எனப் பெயர் பெற்றன என்று கூறுவர்.