பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

பண்பாடும் வாழையடி வாழையாகத் தொடரும் பாரத நாட்டின் பெருவழியாகும். பெரியாழ்வார் பெருமான்,

"எந்தைதந் தைதந்தை தந்தைதம் மூத்தப்பன்

ஏழ்படி கால்தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு

வோணத் திருவிழாவில் அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை அழித்தவனை பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத்

தாண்டென்று பாடுதுமே” என்று அனைவரும் சேர்ந்து பாடுவோம் என்று உலக மக்களை அழைக்கிறார்.

"எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே" என்றும், "எந்தை, தந்தை, தந்தை தந்தைக்கும் முந்தை, வானவர், வானவர் கோனொடும்" என்று நம்மாழ்வார் பெருமானும் பாடுகிறார்.

"எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே" என்று மகாகவி பாரதியார் நாட்டு வணக்கப் பாடலில் பாடுகிறார். புகழும்நல் ஒருவன் என்கோ?

நம்மாழ்வார் பெருமானின் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களுள் மிக அற்புதமான, ஈடு இணையற்ற, தமிழ் சொற்சுவை நிரம்பிய, பக்திச் சுவைமிக்க, தத்துவ ஞானமும் அனைத்தளாவிய உலகளாவிய தத்துவ நிலையும் நிரம்பிய பாசுரத் தொகுதிகளுள் ஒன்று, அவைகளுள் முதன்மையானது என்று கூறத்தக்க அளவிலானது "புகழும் நல் ஒருவன் என்கோ என்று தொடங்கும் பாசுரங்களாகும். இப்பாசுரங்கள் திருமால் வழிபாட்டு முறையை உச்சத்திற்குக் கொண்டுசென்றிருக்கிறது. இந்தப் டாசுரங்களை எத்தனை தடவை திரும்பத்திரும்பப்