பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212

சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

செங்கதிர் முடியன் என்கோ திருமறு மார்பன் என்கோ சங்குசக் கரத்தன் என்கோ

சாதிமா னிக்கத் தையே ! "சாதிமா னிக்க மென்கோ

சவிகொள்பொன் முத்தம் என்கோ சாதிநல் வயிரம் என்கோ

தவிவில்சீர் விளக்கம் என்கோ ஆதியஞ் சோதி என்கோ

ஆதியம் புருடன் என்கோ ஆதுமில் காலத் தெந்தை

அச்சுதன் அமல னையே ! “அச்சுதன் அமலன் என்கோ !

அடியவர் வினைகெ டுக்கும் நச்சுமா மருந்தம் என்கோ !

நலங்கடல் அமுதம் என்கோ ! அச்சுவைக் கட்டி யென்கோ !

அறுசுவை அடிசில் என்கோ நெய்ச்சுவைத் தேறல் என்கோ

கனியென் கோபா லென்கோ !

என்று கனிவாகப் பாடுகிறார். இன்னும்,

6.

7.

“பாலென்கோ : நான்கு வேதப்

பயனென்கோ, சமய நீதி நூலென்கோ : துடங்கு கேள்வி

இசையென்கோ ! இவற்றுள் நல்ல மேலென்கோ வினையின் மிக்க

பயனென்கோ : கண்னன் என்கோ ! மாலென்கோ : மாயன் என்கோ !

வானவர் ஆதி யையே !

"வானவர் ஆதி என்கோ !

வானவர் தெய்வ மென்கோ ! வானவர் போகம் என்கோ !

வானவர் முற்றும் என்கோ ! ஊனமில் செல்வ மென்கோ

ஊனமில் சுவர்க்க மென்கோ

ஊனமில் மோக்கம் என்கோ !

ஒளிமணி வண்ண னையே !