பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 213

8. "ஒளிமணி வண்ணன் என்கோ !

ஒருவனென்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ ! நான்முகக் கடவுள் என்கோ ! அளிமகிழ்ந் துலக மெல்லாம்

படைத்தவை ஏத்த நின்ற களிமலர்த் துளவ னெம்மான்,

கண்ணனை மாய னையே !

9. "கண்ணனை மாயன் றன்னைக்

கடல்கடைந் தமுதம் கொண்ட அண்ணலை அச்சு தன்னை

அனந்தனை அனந்தன் றன்மேல் நண்ணிநன் குறைகின் றானை ஞாலமுண் டுமிழ்ந்த மாலை எண்ணுமா றறிய மாட்டேன்

யாவையும் எவரும் தானே ! 10. "யாவையும் எவரும் தானாப்

அவரவர் சமயந் தோறும் தோய்விலன் புலனைந் துக்கும்

சொலப்படான் உணர்வின் மூர்த்தி ஆவிசேர் உயிரின் உள்ளால்

ஆதுமோர் பற்றி லாத பாவனை அதனைக் கூடில்

அவனையும் கூட லாமே !” என்று குருகூர் வண்சடகோபனார் (நம்மாழ்வார் பெருமான்) பத்துப் பாசுரங்களை அற்புதமாகப் பாடி உலக மக்கள் அனைவரையும் திருமால் வழிபாட்டில் திருப்புகிறார்.

சாதாரண மக்களை, சாது சனங்களை, ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டு வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்த எளிய மக்களை அடாவடித்தனமாகத் துன்புறுத்திக் கொண்டிருந்த கம்சனை வதைத்து அந்த நாட்டுப்பகுதியில் நல்லாட்சியை நிலைநாட்டுவதற்காகத் திருமால் அவதார மெடுத்தார். அவர் தமது ஆதியான சோதி உருவைப் பாற்கடலில் நிறுத்தி வைத்துவிட்டு, கோகுலத்தில் பிறந்து வளர்ந்த வேத முதல்வனாவார். அந்தத் திருமாலை விதிதோறும் சென்று புகழ்ந்து பாடவேண்டும் பஜனை

H