பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 215

பாடிப் புகழ் பெறுங்கள். கண்ணனையும் மணிவண்ணனை யும் பாடி அருள் பெறுங்கள் என்று கூறி, மனிதரைப் பாட மறுத்து !

"சொன்னால் விரோதமிது ஆகிலும்

சொல்லுவன் கேண்மினோ என்னாவில் இன்கவி யானொரு

வர்க்கும் கொடுக்கிலேன்' என்றும்,

“உளனாக வேயெண்ணித் தன்னையொன்

றாக்த்தன் செல்வத்தை வளனா மதிக்கும்.இம் மானிடத்

தைக்கவி பாடியென்” என்றும்,

எத்தனை விரோதம் ஏற்பட்டாலும் மனிதரைப் பாட மாட்டேன் என்று கூறித் திருமால் பெருமைகளையே ஆழ்வார் பாடினார். தாம் மட்டுமல்லாது இதர புலவர்களை யும் கவிஞர்களையும் மனிதரைப் பாடவேண்டா, கண்ணனையே பாடுங்கள், புகழ் பெறுவீர் என்று கூறுகிறார்.

“என்னாவ தெத்தனை நாளைக்குப்

போதும் புலவீர்காள் மன்னா மனிசரைப் பாடிப்

படைக்கும் பெரும்பொருள்?" என்றும்,

“கொள்ளும் பயனில்லைக் குப்பை

கிளர்த்தன்ன செல்வத்தை வள்ளல் புகழ்ந்துநும் வாய்மை

இழக்கும் புலவீர்காள் கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றெல்

லாம்தரும் கோதில்என் வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ”

என்றும் மற்ற புலவர்களை ஆழ்வார் அழைக்கிறார்.

இன்னும், “வாய்கொண்டு மானிடம் பாடவந்த

கவியேன் அல்லேன், ஆய்கொண்ட சீர்வள்ளல் ஆழிப்

பிரானெனக் கேயுளன்” என்று துணிவுடன் கூறுகிறார்.