பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் வழிபாடும் திருவிழாக்களும் 217

மக்கள் பகுதிகளெல்லாம் திருமால் வழிபாட்டில் ஒன்று சேர்வதால் இதை மக்கள் இயக்கமாகக் காண்கிறோம். இதைப் பக்தி இயக்கமாகவே காண்கிறோம்.

நாயகி நாயக பாவத்தில் நம்மாழ்வார் தம்மைப் பாராங்குச நாயகியாகப் பாவித்துத் தமது அன்பை வெளியிடுகிறார்; தீராத காதலை வெளியிடுகிறார். s

"ஏக மூர்த்தி இருமூர்த்தி

மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி, ஐந்து பூதமாய்

இரண்டு சுடராய் அருவாகி நாகம் ஏறி நடுக்கடலுள்

துயின்ற நாராயணனே உன் ஆகம் முற்றும் அகத்தடக்கி,

ஆவி யல்லல் மாய்த்ததே" என்று மனமுருகிப் பாடுகிறார். இன்னும்,

"கால சக்க ரத்தோடு,

வெண்சங் கம்கை யேந்தினாய் ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே !” என்றும்,

"குரைக ழல்கள் நீட்டிமண்

கொண்ட கோல வாமனா குறைக ழல்கை கூப்புவார்கள்

கூட நின்ற மாயனே!" என்றும்,

"என்ன தாவி மேலையாய்

ஏர்கொள் ஏழ்உ லகமும் துள்ளி முற்று மாகிநின்ற

சோதி ஞான மூர்த்தி !” என்றும் பாடுகிறார்.

“யானும் ஏத்தி ஏழுலகும்

முற்றும் ஏத்தி, பின்னையும் தானும் ஏத்தி லும்தன்னை

ஏத்த ஏத்த எங்கெய்தும்