பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. அவை அனைத்தையும் நாம் வரவேற்போம்.

இங்கு அத்தகையதொரு ஆழ்ந்த விசாலமான ஆராய்ச்சி வட்டத்திற்குள் நாம் போகவில்லை. அது இந்த நூலுக்குரிய வேலையும் அல்ல. ஆயினும் வரலாற்றிலும் இலக்கிய ஒப்பீடுகளிலும் காலம் என்பது ஒரு முக்கியமான விசயமாகும்.

பொதுவாகத் தமிழ் மொழி தொன்மையான மொழிகளுள் ஒன்று என்னும் வகையில், தமிழ் அன்பர்கள், தமிழ் அபிமானிகள், தமிழ் அறிஞர்கள், தமிழ் அறிவுச் செல்வர்கள், தமிழ் கற்றறிவாளர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் பலரும், குறிப்பாகத் தமிழ்ப்புலவர்கள் பலரும் - தமிழ் இலக்கியங்களுக்கு மிகவும் பழமையான, தொன்மையான காலங்களைக் குறிப்பதில் பெருமை கொள்கிறார்கள். ஐயாயிரம் பத்தாயிரம் ஆண்டுகள் என்றும், இன்னும் அவற்றிற்கு மேலும் பழமை கூறுவதிலும் மிகவும் அதிகமாகப் பெருமையும் பெருமிதமும் கொள்கிறார்கள்.

தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழ் இலக்கியங்களுக்கும் இலக்கணங்களுக்கும் பல சிறப்புகளும் தனித் தன்மைகளும் இருக்கின்றன. இருந்தபோதிலும், பழங்காலந்தொட்டுப் பாரத நாடு முழுவதற்குமிடையில் பல துறைகளிலும், பொதுவாகவும், குறிப்பாகவும் மொழி, இலக்கியம், பண்பாடு, வரலாறு மரபுகள் முதலியவற்றில் தொடர்புகளும் சார்புகளும், கலப்புகளும், பரஸ்பர ஈடுபாடுகளும் அவைகளால் ஏற்பட்ட பல வகைத் தாக்கங்களும் பரஸ்பர இணைப்புகளும் தொடர்ந்து இருந்து வந்திருக்கின்றன. அவைகளின் பிரதிபலிப்புகளை அவைகளின் சாயல்களைத் தமிழக வரலாற்றிலும் தமிழ் இலக்கியங்களிலும் நாம் காணமுடிகிறது.

நான்மறைகள் (நான்கு வேதங்கள். அவை ரிக், யஜுர், சாமம், அதர்வனம் ஆகியவை) என்பவை பாரத நாட்டின் தொன்மையான இலக்கியங்களாகும். அவை வேதமொழி என்னும் ஒரு பழமையான மக்கள் மொழியில்