பக்கம்:சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 சிலப்பதிகாரமும் திவ்யப்பிரபந்தமும்

தேனும் பாலும் கன்னலும்

அமுது மாகித் தித்திப்ப யானும் எம்பி ரானையே

ஏத்தி னேன்யா னுப்வானே" என்றெல்லாம் நம்மாழ்வார் பெருமான் நாயகியாக நின்று எம்பிரானை நோக்கி நெஞ்சுருகிப் பாடி மகிழ்கிறார்.

உலகில் எதைக் கண்டாலும், எப்பொருளை . கண்டாலும், எந்தக் காட்சியைக் கண்டாலும் அவைகளை, திருமாலின் வடிவமாகவே ஆழ்வார் காண்கிறார். மண்ணை. கண்டால் இது வாமனன் மண் என்று காண்கிறார் விண்ணைப் பார்த்தால் அது வைகுந்தம் என்று காண்கிறார் கடலானது அவருக்குக் கடல் வண்ணனாகக் காட்சி தருகிறது ஞாயிற்றைக் காட்டி இது சிரிதரன்மூர்த்தி என்று கூறுகிறா நெருப்பைக் கண்டால் அது அச்சுதன் என்றும், காற்றை, தழுவினால் அது என் கோவிந்தன் என்றும் கூறுகிறார்.

திங்களைக் காட்டி ஒளி மணிவண்ணனே என்றும் குன்றத்தைக் காட்டி நெடுமாலே என்றும், நல்ல மழையை கண்டால் நாராயணனே என்றும், பசுங்கன்றுகளை. கண்டால் இவை கோவிந்தன் மேய்த்தவையென்றும் நாகத்தைப் பார்த்து இது நாராயணன் கிடக்கையென்றும் கூத்தர் குடமெடுத்தாடினால் அது கோவிந்தன் கத்து என்றும், குழல் சத்தம் கேட்டால் அது மாயவன் குழல் என்றும், ஆய்ச்சியர் கை வெண்ணெயைக் கானில் அது அவனுண்ட வெண்ணெய் என்றெல்லாம் ஆழ்வா பாடுகிறார்.

"திருவுடை மன்னரைக் கானில்

திருமாலைக் கண்டேனே என்னும் உருவுடை வண்ணங்கள் கானில்

உலகளந் தான்என்று துள்ளும் கருவுடைத் தேவில்க ளெல்லாம்

கடல்வண்ணன் கோயிலே என்னும் வெருவிலும் வீழ்விலும் ஒவாக்

கண்ணன் கழல்கள் விரும்புமே !”